மாநில கல்விக்கொள்கை.. இன்று வெளியிடும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்..

State Education Policy: இரு மொழி கொள்கை, கல்லூரி படிப்பிற்கு நுழைவுத்தேர்வு கூடாது, 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய மாநில கல்விக் கொள்கயை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8, 2025) வெளியிடுகிறார்.

மாநில கல்விக்கொள்கை.. இன்று வெளியிடும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்..

முதல்வர் ஸ்டாலின்

Published: 

08 Aug 2025 09:36 AM

சென்னை, ஆகஸ்ட் 8, 2025: தமிழ்நாட்டுக்கான மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அதாவது ஆகஸ்ட் 8 2025 அன்று வெளியிடுகிறார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதாவது முக்கியமாக மும்மொழி கல்வி கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு குரல் கொடுத்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்தியேகமாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என 2021 – 2022 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த கல்விக் கொள்கை என்பது வடிவமைக்கப்பட்டுள்ளது.

600 பக்கங்கள் கொண்ட கல்விக்கொள்கை:

அதன்படி சுமார் 600 பக்கங்கள் கொண்ட கல்விக் கொள்கையை வரைவு ஆனது 2023 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது ஆனால் வெள்ள பாதிப்பு மக்களவைத் தேர்தல் என பல்வேறு பணிகள் இருந்ததால் இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த அறிக்கை என்பது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஓவர் கோட் கட்டாயம்.. கல்வித்துறை அதிரடி உத்தரவு!

முக்கிய அம்சங்கள் என்ன?

குறிப்பாக தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடர வேண்டும் என்றும், கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கையின் போது நுழைவு தேர்வு நடத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் 3, 5, 8 வகுப்பு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கை மீது கருத்துக்கள் பெறப்பட்ட பின் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று வெளியாகும் கவ்லிக்கொள்கை:

2024 ஆம் ஆண்டு இந்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை வழியிடப்படாமல் இருந்தது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 8 2025 தேதியான இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் உடன் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது