விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு – அமைச்சர் அறிவிப்பு

Rain Relief Aid : வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு உடனடியாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 85,500 ஹெக்டேர்கள் வரை பயிர் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார்.

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு – அமைச்சர் அறிவிப்பு

மாதிரி புகைப்படம்

Published: 

02 Dec 2025 17:31 PM

 IST

சென்னை, டிசம்பர் 02: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) உத்தரவிட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது நிலவும் தித்வா புயலின் பாதை மாற்றம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து விரிவாக விளக்கினார். அப்போது பேசிய அவர், தித்வா புயல் (Ditwah) சென்னைக்கு அருகே, 40 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 3, 2025 அன்று அதிகாலை மகாபலிபுரம் அருகே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்றார்.

தித்வா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,  தித்வா புயல் சென்னைக்கு அருகே  மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்றும், இதனால் சென்னை நகரில் நாளை காலை வரை விட்டு விட்டு மழை தொடரும் என்றார். மேலும்,  எண்ணூரில் 26 செ.மீ மழையும், பாரிமுனையில் 25 செ.மீ மழையும் மற்றும் ஐஸ் ஹவுஸ் பகுதி 20 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்றார்.

இதையும் படிக்க : 234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நாம் தமிழர் கட்சி.. திருச்சியில் அடுத்த ஆண்டு மக்களின் மாநாடு..

பெரிய அளவில் தேதம் தவிர்ப்பு

மேலும் பேசிய அவர், புயல் கரையை கடக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் முதல்வர் உத்தரவு வழங்கியுள்ளார்.  வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை நிபுணர்களின் கணிப்பின் படி தித்வா புயல் ஆந்திராவை நோக்கி நகரும் எனக் கூறப்பட்டது. ஆனால் அது திடீரென திசை மாறி சென்னை அருகே மையம் கொண்டுள்ளது. புயலின் தீவிரம் குறைந்ததால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிக்க : டிட்வா புயல் பாதிப்பு.. உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு..

விவசாயிகளுக்கு ரூ.20,000 நிவராணம்

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு உடனடியாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 85,500 ஹெக்டேர்கள் வரை பயிர் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மழை நிறைவடைந்த பின் முழுமையான கணக்கெடுப்பு செய்யப்படும். தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது. அதற்கான இழப்பீடு ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும்.  கனமழையில் பாதிக்கப்பட்ட இலங்கையில் சிக்கிய தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் உதவி செய்துள்ளார் என்றார்.

மனிதர்களை குளிப்பாட்டும் மெஷினை உருவாக்கிய ஜப்பான் - அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த முட்டையின் விலை ரூ.236 கோடி தானாம்.. ஷாக் ஆகாதீங்க!!
நேபாளம் வெளியிட்ட புதிய 100 ரூபாய் நோட்டில் இடம்பெற்ற இந்திய பகுதி.. எல்லை குறித்து மீண்டும் உருவான சர்ச்சை!!
இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர் இவர் தான்.. அவரது சொத்து மதிப்பு தெரியுமா?