சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தஷ்வந்த் விடுதலை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Daswant Case : சென்னை போரூர் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தஷ்வந்த் விடுதலை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தஷ்வந்த் விடுதலை

Updated On: 

08 Oct 2025 12:14 PM

 IST

டெல்லி, அக்டோபர் 08 : சென்னை போரூர் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2017ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த நிலையில், குற்றத்தை உறுதி செய்ய முடியாத காரணத்தால், தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்ததாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், கொலை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இது சம்பந்தமான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றச்சாட்டப்பட்ட நபர்களுக்கு கடும் தண்டனைகளையும் நீதிமன்றம் விதித்து வருகிறது. அதே நேரத்தில் சில வன்கொடுமை வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாததால், குற்றச்சாட்டப்பட்ட நபர்கள் விடுதலை செய்யப்பட்டும் வருகின்றனர். அப்படியொரும் நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது.

சென்னையில் 2017ஆம் ஆண்டு 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட தஷ்வந்தை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு – ஸ்ரீதேவி தம்பதி. இவரது மகள் 7 வயது சிறுமி ஹாசினி. இவர் 2017ஆம் ஆண்டு காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தஷ்வந்த் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து, தந்தை மூலம் தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தார்.

Also Read : போலி நீட் தேர்ச்சி சான்றிதழ்.. மருத்துவ மாணவி குடும்பத்துடன் கைது

வழக்கின் பின்னணி

ஜாமீனில் வெளியே வந்தவுடன் அதே ஆண்டில் தாய் சரளாவை கொடூரமாக கொலை செய்து தப்பிச் சென்றார். மும்பையில் பதுங்கி இருந்த அவரை, கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி ஹாசினி கொலை வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2018ல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

மேலும், தாய் கொலை வழக்கில் தந்தை பிறழ்சாட்சியாக மாறியதால், தஷ்வந்து விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து, சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை தஷ்வந்த் நாடினார். அப்போது, அவரது மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து, வழக்கை தள்ளுபடி செய்தது.

Also Read : சிறுவனுக்கு கத்திக்குத்து.. தலைமைக் காவலர் வெறிச் செயல்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி

தொடர்ந்து, தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு 2025 அக்டோபர் 8ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தபோது தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. குற்றத்தை உறுதி செய்ய முடியாத காரணத்தால், தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து, அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டது.