பச்சிளம் குழந்தையை வீடு புகுந்து கவ்விச்சென்ற தெருநாய்.. அதிர்ச்சி சம்பவம்!

Infant Attacked by Dog | திருவாரூரில் வீட்டிற்குள் புகுந்த தெருநாய் ஒன்று தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த ஒன்றரை வயது பச்சிளம் ஆண் குழந்தையை கவ்விச்சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

பச்சிளம் குழந்தையை வீடு புகுந்து கவ்விச்சென்ற தெருநாய்.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Published: 

21 Aug 2025 08:50 AM

திருவாரூர், ஆகஸ்ட் 21 : திருவாரூரில் (Thiruvarur) வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பச்சிளம் ஆண் குழந்தையை தெருநாய் ஒன்று கவ்விச்சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் கவ்விச்சென்றதால் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், பச்சிளம் குழந்தையை நாய் கவ்விச்சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தை – கவ்விச்சென்ற தெருநாய்

திருவாரூரு மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு ஒன்றரை வயதில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. சம்மபவத்தன்று குழந்தையை தூங்க வைத்துவிட்டு அந்த பெண் வீட்டு வேலைகளை செய்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் நுழைந்த தெருநாய் ஒன்று, தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தை கவ்விச்சென்றுள்ளது.

இதையும் படிங்க : வறுமையில் வாடிய குடும்பம்.. 3 பெண்கள் எடுத்த விபரீத முடிவு.. விருதுநகரில் அதிர்ச்சி!

நாய் கடித்ததில் காயமடைந்த பாட்டி மற்றும் குழந்தை

தெருநாய் குழந்தையை கவ்விச்சென்றதை கவனித்த குழந்தையின் பாட்டி, நாயை விரட்ட முயன்றுள்ளார். அப்போது குழந்தையின் பாட்டியையும் அந்த தெருநாய் கடித்துள்ளது. இந்த நிலையில், சத்தம் கேட்டு ஓடிவந்த குழந்தையின் தாய் நாய் கடித்ததில் காயமடைந்த பாட்டியையும், பச்சிளம் குழந்தையையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு உடனடியாக அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : திருமண நிகழ்ச்சியில் சோகம்.. நடனமாடும் போதே பிரிந்த உயிர்… செங்கல்பட்டில் அதிர்ச்சி

விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை

வீடு புகுந்து தெருநாய் கடித்ததில் பாட்டியும், ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையும் காயமடைந்த நிலையில், அது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பச்சிளம் குழந்தையை வீடு புகுந்து நாய் கவ்வின்சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.