சிவகங்கை… இளைஞர் அஜித் போலீஸ் காவலில் மரணம்: கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!
Sivaganga Police Custody Death: சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் காவல் விசாரணையின்போது இறந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் மரணமாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பிரேதப் பரிசோதனை முடிவில் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இளைஞர் அஜித் குமார்
தமிழ்நாடு ஜூலை 01: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது மரணமடைந்தார். இது தொடர்பாக வழக்கு முதலில் மரணமாக இருந்தது, பின்னர் பிரேத பரிசோதனையின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட 6 போலீசார் பணியிடை நீக்கப்பட்டனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவகம் தெரிவித்துள்ளது. சிவகங்கை திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரணத்தை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்பியைபணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் இறந்த காவலாளி அஜித்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் (வயது 28), தங்க நகை திருட்டு வழக்கில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதையடுத்து மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு கொலை வழக்காக மாற்றம்: 5 பேர் கைது
இச்சம்பவம் தொடர்பாக, முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இது சாதாரண மரணம் அல்ல என்பது உறுதியானதைத் தொடர்ந்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 போலீசர்கள் – பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா மற்றும் சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி, இந்த ஐந்து போலீசர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் அதிகாலை வரை தயாரிக்கப்பட்டு, பின்னர் கைதானோர் போலீஸ் வேனில் அழைத்து வரப்பட்டனர்.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட 6 போலீசார் பணியிடை நீக்கப்பட்டனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாராக இருப்பதால், வழக்கு மேலும் நிர்வாக ரீதியாக சரிவர விசாரிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே இந்த வழக்கு தற்போது குற்றப்புலனாய்வு துறை சிபிசிஐடிக்கு (CBCID) மாற்றம் செய்யப்பட்டுள்ளது என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. சிவகங்கை திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரணத்தை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்பியைபணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிபிஐக்கு மாற்றி விசாரிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக… pic.twitter.com/G69I2ytIMb
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 1, 2025
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு 18 காயங்கள் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை தகவல் வெளியாகியுள்ளது. இது ஸ்டாலின் அரசின் காவல்துறை வன்முறையால் நிகழ்ந்த கொலை என எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார். ஸ்டாலின் ஆட்சியில் 25 காவல் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். அஜித் மரணத்தில் “வலிப்பு” என எப்பிஐஆர் பதிவுசெய்தது பொய் என தெரிவித்தார்.
விக்னேஷ் மரண வழக்கில் போலியான விளக்கம் அளித்த முறை இதிலும் மீண்டும் நடந்துள்ளது என்றார். நாடு முழுக்க #JusticeForAjithkumar ஹேஷ்டேக் எழுச்சி ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.