எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

Sengottaiyan Resigned His MLA Post | தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியுள்ளார்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்

Updated On: 

26 Nov 2025 12:27 PM

 IST

சென்னை, நவம்பர் 26 : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியுள்ளார். இதனை அடுத்து செங்கோட்டையன் தனது அடுத்தக்கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்

அதிமுக ஓபிஎஸ் – இபிஎஸ் என இரண்டு அணிகலாக பிரிந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற முயற்சியை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசியதன் காரணமாக அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனை எடப்படி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இது அரசிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில் இருந்த செங்கோட்டையன் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். தமிழக அரசிய வரலாற்றில் ஒரே தொகுதியில் போட்டியிட்டு வெறவர் என்ற பெருமைக்கு உரியவர் தான் செங்கோட்டையன். அவர் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்டு இதுவரை 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செங்கோட்டையனுக்கு முன்பாகவே ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 63 ஆக குறைந்துள்ளது.

இதையும் படிங்க : 23 வகையான தோட்டங்கள், 2000 ரோஜா வகைகள், விளையாட்டு திடல்.. அதிநவீன வசதிகளுடன் கோவையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்கா

(தற்போது வந்த தகவலை வைத்து முதற்கட்ட செய்தி கொடுக்கப்பட்டுள்ளது . மேலதிக தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன)

Related Stories
வங்கக்கடலில் உருவானது சென்யார் புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா? வானிலை ரிப்போர்ட்.
வீட்டுல ஒத்த ரூபாய் கூட இல்ல.. திருட வந்த வீட்டில் எதுவும் கிடைக்காததால் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதிய திருடன்!
எத்தனை நாட்கள் தமிழை வைத்து ஏமாற்றுவார்கள்? தோல்வி அடைந்த ஆட்சி திமுக ஆட்சி – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்..
அடுத்த சுற்று வடகிழக்கு பருவமழை.. எப்போது தொடங்கும்? எந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை?
அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..
23 வகையான தோட்டங்கள், 2000 ரோஜா வகைகள், விளையாட்டு திடல்.. அதிநவீன வசதிகளுடன் கோவையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்கா..
பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..