கனமழை எச்சரிக்கை – நாளை இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
School Leave Alert : தமிழகத்தில் டிசம்பர் 4, 2025 நாளை சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, டிசம்பர் 3 : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகிலுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிசம்பர் 3, 2025 அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்துள்ளது இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் பலவீனமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வட தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், டிசம்பர் 4, 2025 நாளையும் கனமழை (Heavy Rain) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4, 2025 நாளை பள்ளிகளுக்கு விடுமுறை (School Leave) அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் டிசம்பர் 4, 2025 நாளை சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 3 நாட்கள் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனைய ஈடுகட்ட அடுத்தடுத்த வாரங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் எனவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : மின்சாரம் தாக்கி டீக்கடை உரிமையாளர், ஊழியர் பலி – மதுரை அருகே சோகம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் பதிவு
Only SCHOOLS will remain closed tomorrow (04/12/25) in Tiruvallur District .
“A day without school is a day full of possibilities and opportunities to learn and unlearn ourselves for a better tomorrow!! ”
Best wishes
M Prathap
District Collector— Collector Tiruvallur (@TiruvallurCollr) December 3, 2025
நாளை இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4, 2025 அன்று நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பும் உள்ளது, சென்னையைப் பொறுத்தவரை டிசம்பர் 4, 2025 அன்று சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நாளை இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இதனிடையே வட தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து போக்குவரத்து சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து வரும் நிலையில், வட கிழக்கு பருவமனை தீவிரமாக உள்ள நிலையில், கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது.