12 மீனவர்கள் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்!

Rameswaram Fishermen One Day Strike | கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மீனவர்களையும், மீனவர்களின் படகுகளையும் மீட்டு தர கோரிக்கை வைத்து மீனவர்கள் ஒரு நாள் போராட்டத்தை நடத்த உள்ளனர்.

12 மீனவர்கள் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Dec 2025 08:46 AM

 IST

சென்னை, டிசம்பர் 24 : ராமேஸ்வரத்தில் (Rameswaram) இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று (டிசம்பர் 24,2025) தங்கச்சிமடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மீனவர்களை விடுவிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் – மீனவர்கள்

இந்த விவகாரம் தொடர்பாக ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் நேற்று (டிசம்பர் 23, 2025) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்டு கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீண்ட நாட்களாக சிறையில் தவித்து வரும் மீனவர்கள், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரமாக உள்ள படகுகள் ஆகியவற்றை மீட்டு தர வேண்டும் என்றும் அவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : வைகுண்ட ஏகாதசி…. திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – வெளியான தகவல்

ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு

மேற்குறிப்பிட்டுள்ள இந்த கோரிக்கைகளை தெரிவிக்க ஜனவரி 13, 2025 அன்று ராமேஸ்வரம் வர உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச மீனவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (டிசம்பர் 24, 2025) ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதையும் படிங்க : அரையாண்டு விடுமுறை – பள்ளிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை – விவரம் இதோ

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ள மீனவர்கள்

இதேபோல டிசம்பர் 26, 2025 அன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மீனவர்களின் விசை படகுகளை கைப்பற்றுவது மற்றும் மீனவர்களை கைது செய்வது உள்ளிட்ட செயல்களை இலங்கை கடற்படை தொடர்ந்து செய்து வரும் நிலையில், மீனவர்கள் இந்த போராட்ட முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.

கடத்தியவரின் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி தப்பித்த இளைஞர் - என்ன நடந்தது?
விமான நிலையங்களில் கைவிடப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் இளைஞர்
11 மாத வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீட்டை காலி செய்ய மறுக்கும் வாடகையாளர்
2026ல் இந்த ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம்.. அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்..