“மக்களுக்கு நிம்மதியான வாழ்வை வழங்குவதே நோக்கம்”.. பிரதமர் மோடி புதுச்சேரியல் பேச்சு!!
PM Narendra Modi speech at Puducherry: புதுச்சேரி வளர்ச்சியில் மின்சார பேருந்துகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களுக்கு நிம்மதியான வாழ்வை வழங்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், அரசு காலிப் பணியிடங்களை இரட்டை எஞ்சின் ஆட்சிதான் நிரப்பி உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் பிரதமர் மோடி
புதுச்சேரி, மார்ச் 01: வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலாவை மேம்படுத்தி புதுச்சேரியை சிறந்த மாநிலமாக உருவாக்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுச்சேரியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பேசிய அவர், மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்பட்டால், ஒரு மாநிலம் எப்படி வளரும் என்பதற்கு புதுச்சேரி உதாரணமாகும் என்றார். தனிநபர் வருமானத்தில் புதுச்சேரி வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறிய அவர், துறவிகள், சித்தர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி என்றும் புகழ்ந்து கூறினார். இந்தியா முழுவதிலும் உயர்தரமான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருவதாகவும், மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த மூலதன முதலீட்டு சிறப்பு நிதி புதுச்சேரிக்கும் வழங்கப்படுகிறது. வலிமையான திறன்வாய்ந்த இளைஞர்கள் தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் என்றம், இளைஞர்களின் கனவுகளை நனவாக்குவதே எனது தலைமையிலான அரசு பாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க : அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்… வெல்லமண்டி நடராஜன் வரிசையில் கிருஷ்ணமூர்த்தி.. அடுத்து யார்!
மக்கள் நன்றாக இருந்தால் தான் நாடு முன்னேறும்:
#WATCH | Puducherry: Prime Minister Narendra Modi says, “Across India, there is a great emphasis on building top-quality infrastructure…More funding for infrastructure means better roads, water supply, coastal infrastructure, schools, hospitals, and many such projects. These… pic.twitter.com/7ld0g9Xgxp
— ANI (@ANI) March 1, 2026
மக்கள் சேவை செய்ய அரசுப் பணியில் இணைந்த அனைத்து இளைஞர்களையும் நான் வாழ்த்துவதாக கூறினார். மேலும், மாசு இல்லாத போக்குவரத்துதான் உலகின் மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும், காற்று மாசை குறைப்பதில் மின்சார பேருந்துகள் முக்கிய பங்காற்றுவதாகவும் கூறினார். அதோடு, புதுச்சேரி வளர்ச்சியில் மின்சார பேருந்துகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களுக்கு நிம்மதியான வாழ்வை வழங்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், அரசு காலிப் பணியிடங்களை இரட்டை எஞ்சின் ஆட்சிதான் நிரப்பி உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மக்கள் நன்றாக இருந்தால் தான் நாடு முன்னேறும் என்றும், புதுச்சேரியை மருத்துவ சுற்றுலா மையமாக மாற்ற முடியும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு:
பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி, நேற்றிரவு தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவர், சென்னையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு பிரத்யேக ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி சென்றடைந்தார். பிரதமரின் வருகையையொட்டி, புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரூ.2,700 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டம்:
தொடர்ந்து, அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்ற அவர்,புதுச்சேரியில் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் திறந்து வைத்தார். 750 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் கரசூர்–சேதராபேட்டை தொழிற்பேட்டை முக்கிய திட்டமாகும். இதில் மருந்து தொழிற்பூங்கா, துணி தொழிற்பூங்கா, ஐடி பூங்கா, ஐஐடி மதராஸ் ஆராய்ச்சி மையம் மற்றும் ஜிப்மர் மருத்துவ வசதிகள் அமைக்கப்படவுள்ளன. இது தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 வழிச்சாலைக்கு அடிக்கல்:
மேலும், மரக்காணம்–புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்த திட்டம் நகரப் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயண நேரத்தை ஒரு மணி நேரத்திலிருந்து சுமார் 30 நிமிடமாக குறைக்கும். மாமல்லபுரம், கல்பாக்கம் அணு மின் நிலையம், ஆரோவில் போன்ற முக்கிய இடங்களுக்கான இணைப்பும் மேம்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : தகுதி இருந்தும் அரசின் இலவச லேப்டாப் கிடைக்கவில்லையா?.. விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டம்:
பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி மதுரை விமான நிலைய வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.4,400 கோடி மதிப்பிலான புதிய ரயில், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.