900 கிலோ ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த முயற்சி.. ஒருவர் கைது..

Ration Rice Smuggling: சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயற்சி செய்த 900 கிலோ ரேஷன் அரிசியை காவல் துறையினர் தடுத்தி நிறுத்தினர். இது தொடர்பாக பிரகாஷ் என்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

900 கிலோ ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த முயற்சி.. ஒருவர் கைது..

கோப்பு புகைப்படம்

Published: 

08 Aug 2025 12:14 PM

சென்னை, ஆகஸ்ட் 8, 2025: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையால் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியொடப்பட்ட அறிக்கையில், (07.07.2025) தெற்கு ரயில்வே, ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையாளர் கே.அருள்ஜோதி மற்றும் சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையாளர் பி.ராமகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையாளர் அலோக்குமார் அவர்களின் உத்தரவின் பெயரில் எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கே.பி. ஜெபாஸ்டியன் அவர்களின் தலைமையில் ஜி. சாய்லீலா, துணை ஆய்வாளர். எஸ். ஜோசப் அமலதாஸ்,உதவி துணை ஆய்வாளர். சன்னிலா, உதவி துணை ஆய்வாளர், ஜி. கண்ணன்,தலைமை காவலர், வி. குமரவேல், தலைமை காவலர், என்.ராஜேஷ் , தலைமை காவலர் ஆகியோர் கொண்ட ஒரு சிறப்பு குழு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு கண்காணிப்பு மேற்கொண்டனர்.

900 கிலோ அரிசி கடத்த முயற்சி:

இந்த கண்காணிப்பின் போது எழும்பூர் ரயில்வே நடைமேடையில் 36 மூட்டையுடன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபர் பிடிபட்டார். மொத்தம் 900 கிலோ ரேஷன் அரிசி ஆகும். இதில் 35 வயது உடைய பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை சாந்த கிருஷ்ண,தலைமை காவலர், ஏ ராஜாராம், தலைமை காவலர், குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை, சென்னை தெற்கு அவர்களிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.

Also Read: 17 ஆண்டுகள் பகை.. தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையால் ரேஷன் அரிசி கடத்தும் நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் அரிசி மற்றும் புறப்பொருட்களை கடத்துவது வாடிக்கையான சம்பவமாக நடைபெற்று வருகிறது அதனை தடுக்கும் வகையில் அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

அந்த வகையில் ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் எத்தனை அளவில் இருக்கிறது என்பதை கண்காணிக்கும் பொருட்டு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவ்வபோது இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது 900 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.