மாணவர்களே..! விட்டாச்சு லீவு.. 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அரசு அறிவிப்பு..

Pongal Festival - School Leave: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜனவரி 14, 2026 முதல் ஜனவரி 18, 2026 வரை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களே..! விட்டாச்சு லீவு.. 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அரசு அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

13 Jan 2026 06:40 AM

 IST

சென்னை, ஜனவரி 13, 2026: தமிழர் திருநாளாம் தைத் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜனவரி 14ஆம் தேதி போகி, ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல், மற்றும் ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் ஆகியவை கொண்டாடப்பட உள்ளன. இந்தச் சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜனவரி 14, 2026 முதல் ஜனவரி 18, 2026 வரை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

5 நாட்கள் தொடர் விடுமுறை:

வழக்கமாக போகி பண்டிகை அன்று சில மாவட்டங்களில் மட்டுமே விடுமுறை வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் போகி தினத்திற்கே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பொங்கல் பண்டிகை விடுமுறை…கன்னியாகுமரியில் படகு சேவை 3 மணி நேரம் நீட்டிப்பு!

ஜனவரி 14, 15, 16 ஆகிய புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் பண்டிகை விடுமுறையாகவும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறையாகவும் இருப்பதால், மாணவர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

இதன் காரணமாக, விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளியூர்களில் பயிலும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையை அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட முடியும். இந்த அறிவிப்பால் மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்…களமிறங்கிய சிறப்பு குழு- புகார் எண்கள் அறிவிப்பு!

சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 முதல் 14 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் அரசு பேருந்துகள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியூர் பயணம் செய்வார்கள். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தமாக 34,087 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, ஜன.9 முதல் 14 வரை சென்னையில் இருந்து மட்டும் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மொத்தமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதையொட்டி, சென்னையில் இருந்து 11.35 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!