மதிமுகவுக்கான அங்கீகாரம்… வைகோவின் பலே தேர்தல் கணக்கு…வரப்போகும் டிவிஸ்ட்!

mdmk vaiko master plan வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுகவை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றுவதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பலே திட்டத்தை தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், ஒரு டிவிஸ்ட் உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மதிமுகவுக்கான அங்கீகாரம்... வைகோவின் பலே தேர்தல் கணக்கு...வரப்போகும் டிவிஸ்ட்!

வைகோவின் தேர்தல் கணக்கு

Published: 

02 Dec 2025 16:13 PM

 IST

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது. இதே போல, மதிமுகவும் கூடுதல் தொகுதிகளை கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மதிமுகவுக்கு கிடைக்கும் தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

வெற்றியுடன் கணிசமான வாக்குகளை பெற்ற தொகுதி

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிட்ட 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதே போல கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு எதிராக தேமுதிக உள்ளிட்டட கட்சிகள் அமைத்த மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்றாலும், சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. எனவே, அந்த தொகுதிகளை திமுகவிடம் வலியுறுத்தி கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: 234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நாம் தமிழர் கட்சி.. திருச்சியில் அடுத்த ஆண்டு மக்களின் மாநாடு..

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்க முடிவு

ஏனென்றால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக அந்தக் கட்சியின் பலத்துடன் தன் பலத்தையும் சேர்த்து தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏக்களை பெற முடியும் என்ற திட்டத்தை வகுத்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அரியலூர், மதுரை தெற்கு, சாத்தூர், வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளில் வெற்றியும், மதுராந்தகம், பல்லடம் ஆகிய தொகுதிகளில் தோல்வியையும் மதிமுக சந்தித்திருந்தது. எனவே இந்த 6 தொகுதிகளுடன் சேர்த்து திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்பதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மதிமுகவை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்ற திட்டம்

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு அதில் வெற்றி பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மதிமுக உருவெடுக்க வேண்டும் என்பதும், நிரந்தர சின்னம் வாங்க வேண்டும் என்பதே அவர்கள் திட்டமாக வைத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, திமுகவிடம் தன் வசம் உள்ள சாத்தூர், மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளை மீண்டும் மதிமுக கேட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. இதே போல, கணிசமான வாக்குகளை கொடுத்த கோவில்பட்டி, சங்கரன்கோவில், ஆவடி, ஜெயங்கொண்டம், தூத்துக்குடி, பல்லடம், பூந்தமல்லி, பல்லாவரம் மற்றும் திருச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியை மதிமுக கேட்டு பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள்…. கோபியில் செங்கோட்டையனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

இறுதியில் வரப்போகும் டிவிஸ்ட்

இதில், ஆவடி சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏவாகவும், பால் வளத்துறை அமைச்சராகவும் சா.மு.நாசர் இருந்து வரும் நிலையிலும், இதே போல பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியும் திமுக வசம் உள்ள நிலையிலும் இந்த இரு தொகுதிகளை மதிமுக கேட்கும் பட்சத்தில், அந்த இரு தொகுதிகளை திமுக வழங்குமா என்பது சந்தேகமாகும். மேலும், வைகோவுக்கு வயது முதிர்ச்சியால் கட்சி மற்றும் கட்சியின் தலைமை பொறுப்பு ஆகியவை துரை வைகோ வசமே செல்ல உள்ளதால் வரும் சட்டமன்றத் தேர்தல் துரை வைகோவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மனிதர்களை குளிப்பாட்டும் மெஷினை உருவாக்கிய ஜப்பான் - அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த முட்டையின் விலை ரூ.236 கோடி தானாம்.. ஷாக் ஆகாதீங்க!!
நேபாளம் வெளியிட்ட புதிய 100 ரூபாய் நோட்டில் இடம்பெற்ற இந்திய பகுதி.. எல்லை குறித்து மீண்டும் உருவான சர்ச்சை!!
இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர் இவர் தான்.. அவரது சொத்து மதிப்பு தெரியுமா?