முதலிரவுக்கு மறுத்த மனைவி.. புதுமாப்பிள்ளை வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!

Man Brutally Attacked Newly Wed Wife | சென்னை புரசைவாக்கத்தில் ஜோஸ்வா என்ற 33 வயது நபருக்கு 24 வயது இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், முதலிரவு அன்று அந்த பெண் தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் ஜோஸ்வா அவரை மிக கடுமையாக தாக்கியுள்ளார்.

முதலிரவுக்கு மறுத்த மனைவி.. புதுமாப்பிள்ளை வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!

ஜோஸ்வா

Published: 

27 Nov 2025 08:42 AM

 IST

சென்னை, நவம்பர் 27 : சென்னை (Chennai) புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் ஜோஸ்வா. 33 வயதான இவருக்கும் திருவள்ளூரை சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண தகவல் இணையதளம் மூலமாக இவர்களது பெற்றோர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, நவம்பர் 23, 2025 அன்று இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து நவம்பர் 24, 2025 அன்று அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் மணமகளுக்கு அந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

முதலிரவுக்கு மறுத்த மனைவி – புதுமாப்பிள்ளை வெறிச்செயல்

இளம் பெண் அறைக்குள் நுழைந்ததுமே தாம்பத்திய உறவுக்காக ஜோஸ்வா ஆர்வமாக இருந்ததாக தெரிகிறது. ஆனால், மணமகளுக்கு அப்போது தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாததால் முதல் இரண்டு நாட்கள் இருவரும் பேசி பழகுவோம். பிறகு இந்த தாம்பத்திய உறவு குறித்து முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். ஆனால், அதனை ஏற்க மறுத்த ஜோஸ்வா அன்றே தாம்பத்திய உறவு நடக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : SIR படிவத்தால் 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொலையாளி – சென்னை கொலை வழக்கில் திடீர் திருப்பம் – பரபரப்பு தகவல்

அதேபோல அந்த இளம்  பெண்ணும் தற்போது தாம்பத்திய உறவு வேண்டாம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோஸ்வா அறையில் இருந்த சுத்தியலை எடுத்து இளம் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் கை, கால்கள், நெற்றி என பல இடங்களில் பலத்த காயமடைந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டபடியே மயங்கி கீழே விழுந்துள்ளார். இந்த நிலையில் ஜோஸ்வா இளம் பெண்ணை அறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். காலையில் தான் உறவினர்கள் அறையை திறந்து இளம் பெண்ணை மீட்டுள்ளனர்.

மணமகள் கொடுத்த பகீர் வாக்குமூலம்

இந்த விவகாரம் குறித்து மணகமள் கூறிய வாக்குமூலத்தில், ஜோஸ்வா தன்னை மிகப்பெரிய பணக்காரர் என்றும், வரதட்சணையாக நகை எதுவும் வேண்டாம் என்று கூறி என்னை திருமணம் செய்தார். ஆனால் அவரது வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவருக்கு திருமணத்திற்கு முன்பு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள பெண்ணுடனும் அவர் தொடர்பில் இருந்துள்ளார்.

இதையும் படிங்க : வீட்டுல ஒத்த ரூபாய் கூட இல்ல.. திருட வந்த வீட்டில் எதுவும் கிடைக்காததால் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதிய திருடன்!

சம்பவத்தன்று அவர் என்னை தாம்பத்திய உறவுக்கு அழைத்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவே இந்த கொடூரத்தை அவர் அரங்கேற்றியுள்ளார். இனி அவருடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அனு தாக்குதல்களை தாங்கக் கூடிய செயற்கை மிதக்கும் தீவை உருவாக்கும் சீனா
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்!