Edappadi Palaniswami: மக்களின் நலன்! அமித்ஷாவின் வீட்டின் கதவை தட்டுவது தவறா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
Edappadi Palaniswami Slams DMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'மக்களை காப்போம்' பயணத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். நீட் தேர்வு ரத்து, விவசாயிகள் பிரச்சனைகள், குடிமராமத்து திட்டம் நிறுத்தம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, அரசின் செயல்பாடுகளை கண்டித்தார். அமித் ஷாவை சந்தித்தது குறித்தும் விளக்கம் அளித்தார்.

எடப்பாடி பழனிசாமி
குன்னூர், ஜூலை 15: அதிமுக பொது செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி (Edappadi Palaniswami) இன்று அதாவது 2025 ஜூலை 15ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தை அடுத்த குன்னூரில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் (Makkalai Kappom Thamilagathai Meetpom) பயணத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது பேசிய அவர், “ஆட்சியில் இருக்கிற குறையை சொல்ல முடியல ஊர்ந்து போனார் தவழ்ந்து போனார்னு சொல்லவேண்டியது, இதற்காகவா உங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆக்கினார்கள். உள்துறை அமித்ஷா (Amit Shah) வீட்டின் கதவை தட்டினால்தான் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை தீரும். இதனால், நாங்கள் அமித்ஷா வீட்டின் கதவை தட்டினோம்.
ALSO READ: சமூக விடுதலை நீண்ட பயணம்! இதை நான் மாற்றுவேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என நம்பிய மாணவர்கள் ஏமாந்ததுதான் மிச்சம். நீட் தேர்வு ரத்து ரகசியம் தெரியும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்றார். தமிழ்நாட்டில் இதுவரை நீட் தேர்வு ரத்தானதா..? சட்டமன்றத்தில் உள்ள டேபிள் மீது ஏறி நடனம் ஆடின கட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம். சட்டையை கிழிச்சுகிட்டு வெளிவந்தவர் மு.க.ஸ்டாலின். இப்படிப்பட்ட நீங்கள் எங்களை பற்றி பேசலாமா..? ” என்று கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்:
“ஆட்சியில் இருக்கிற குறையை சொல்ல முடியல ஊர்ந்து போனார் தவழ்ந்து போனார்னு சொல்லவேண்டியது, இதற்காகவா உங்களை முதல்வர், துணை முதல்வர் ஆக்கினார்கள்”- எடப்பாடி பழனிசாமி
எம்ஜிஆர் காலத்திலிருந்து Defame செய்யும் அரசியல்தானே இவர்கள் வாடிக்கை…தனி நபர் அவதூறு மட்டுமே தெரியும். இப்ப… pic.twitter.com/83BfWR6cEA
— Abdul Muthaleef (@MuthaleefAbdul) July 15, 2025
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இதுவரை எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது..? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் குடிமராமத்து திட்டத்தை மு.க.ஸ்டாலின் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி வருவாய்த்துறை என்று ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இதற்கு, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்ணு, காது, மூக்கு வச்சு உங்களுடன் ஸ்டாலின் என்ற விளம்பரத்தை தேடி கொள்கிறார்” என்றார்.
ALSO READ: திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர விசிக துணை நிற்கும்.. விசிக தலைவர் திருமாவளவன் உறுதி..!
முன்னதாக, அரியலூர் விவசாயிகள் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசு எத்தனை தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அறிவித்தார்கள். அறிவித்தபடி, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 தரவில்லை. நான் பலமுறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்ததும், திராவிட முன்னேற்ற கழக அரசும் வழங்கவில்லை. உங்களின் ஆதரவுடன் அதிமுக அரசு அமைந்த உடன் உங்களது கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.