உஷாரய்யா உஷார்… மதுரை: போலி ஸ்கிரீன்ஷாட் மூலம் ரூ.27 லட்சம் மோசடி – தம்பதி கைது!

Madurai Couple Arrested: மதுரை நகரில் ஓட்டல் மற்றும் பேக்கரி நடத்தும் பெஞ்சமின் தம்பதி, மொத்த விற்பனை நிறுவனத்திடம் இருந்து ஐந்து ஆண்டுகளாக பொருட்கள் வாங்கி, போலி ஸ்கிரீன்ஷாட்கள் மூலம் ரூ.27 லட்சம் மோசடி செய்துள்ளனர். வங்கிக் கணக்கு சோதனையின் மூலம் மோசடி அம்பலமானது.

உஷாரய்யா உஷார்... மதுரை: போலி ஸ்கிரீன்ஷாட் மூலம் ரூ.27 லட்சம் மோசடி – தம்பதி கைது!

போலி ஸ்கிரீன்ஷாட் மூலம் மோசடி

Published: 

28 Jun 2025 10:34 AM

 IST

மதுரை ஜூன் 28: மதுரையில் (Madurai) ஓட்டல் மற்றும் பேக்கரி நடத்தும் பெஞ்சமின் தம்பதி (Benjamin couple), கடந்த 5 ஆண்டுகளாக ஒரு மொத்த விற்பனை நிறுவனத்திடம் இருந்து ரூ. 29½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் வாங்கியுள்ளனர். ஆனால், பணம் செலுத்தியதாக போலியான ஸ்கிரீன்ஷாட்கள் அனுப்பி, உண்மையில் ரூ. 2 லட்சம் மட்டுமே செலுத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. வங்கிக் கணக்கைச் சோதனை செய்த பிறகு, குமார் என்ற வியாபாரி இந்த மோசடியை கண்டறிந்து மத்திய குற்றப்பிரிவில் புகார் (Central Crime Branch) அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெஞ்சமின் மற்றும் அவரது மனைவி எலீஸ்பாவை கைது செய்துள்ளனர். தொழில்நுட்பத் துயரத்தை பயன்படுத்தி மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரும் காவலில் இருந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

போலி ஸ்கிரீன்ஷாட் மூலம் ரூ.27 லட்சம் மோசடி

மதுரை நகரில் ஓட்டல் மற்றும் பேக்கரி நடத்தி வரும் தம்பதி, 5 ஆண்டுகளாக மொத்த விற்பனை நிறுவனத்திடமிருந்து பொருட்கள் வாங்கி, பணம் செலுத்தியதாக போலியான ஸ்கிரீன்ஷாட்களை அனுப்பி, ரூ. 27 லட்சத்து 57 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர் போல… மோசடியில் இறங்கிய தம்பதி

மதுரை மாத்தூர் மீனாட்சி கார்டன் பகுதியைச் சேர்ந்த குமார் (42), ஹோட்டல்களுக்கு தேவையான சிக்கன், பீட்சா, ஐஸ்கிரீம் வகை பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தார். அவரது நிறுவனத்தில், நாகனாகுளம் பகுதியை சேர்ந்த பெஞ்சமின் (50) மற்றும் அவரது மனைவி எலீஸ்பா (45), கடந்த 2021 முதல் பொருட்கள் வாங்கி வந்துள்ளனர்.

பணம் செலுத்தியதாக ‘தந்திரம்’ – வங்கி கணக்கில் வரவில்லை

பெஞ்சமின் தம்பதி வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்தியதாக ஸ்கிரீன்ஷாட்கள் அனுப்பி வந்தனர். குமாரும் பணம் வருவதாக நம்பி, வருடங்களாக பொருட்களை அனுப்பி வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் வங்கிக் கணக்கை சோதனை செய்தபோது, எந்த பணமும் வரவில்லையென தெரிய வந்தது. ஸ்கிரீன்ஷாட்கள் எல்லாம் எடிட் செய்யப்பட்ட போலியானவை என்பதும் கண்டறியப்பட்டது.

மொத்தம் ரூ. 29½ லட்சம் பொருட்கள் வாங்கியது தெரியவந்தது

விசாரணையில், தம்பதி மொத்தமாக ரூ. 29½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் வாங்கியிருந்தாலும், அதில் சுமார் ரூ. 2 லட்சம் மட்டுமே உண்மையில் செலுத்தியுள்ளனர். மீதமுள்ள ரூ. 27,57,000 தொகை மோசடியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

போலீசில் புகார் – தம்பதி கைது

இதையடுத்து, குமார் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் பெஞ்சமின் மற்றும் எலீஸ்பா மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..