சிலிண்டர் தட்டுப்பாடு.. ஹோட்டல், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்.. அரசு அதிரடி அறிவிப்பு!!

சிலிண்டர் கட்டுப்பாடு இருக்கும் வரை இந்த சலுகை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு தட்டுப்பாட்டை சீர்செய்வது தொடர்பாக பலதரப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், உணவகங்களில் எதற்காக மின் பயன்பாடு அதிகரித்தது என்று ஆராயப்படாது என்றும் சென்னையில் மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் தட்டுப்பாடு.. ஹோட்டல், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்.. அரசு அதிரடி அறிவிப்பு!!

ஹோட்டல்கள், டீக்கடைகளுக்கு அதிரடி அறிவிப்பு

Updated On: 

14 Mar 2026 14:04 PM

 IST

சென்னை, மார்ச் 14: நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள உணவகங்கள், டீக்கடைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.2 மின்சார மானியம் வழங்கப்படும் என தமிழிக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, உணவு தயாரிக்கும் உணவகங்கள் எரிவாயுவுக்கு பதிலாக மின் அடுப்பு பயன்படுத்தியதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மின்சார மானியமாக யூனிட்டுக்கு ரூ.2 சலுகை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவின்றி மாற்று எரிவாயுவை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு அச்சம்.. ஏஜென்சிகளில் மக்கள் முற்றுகை.. முடங்கிய ஆன்லைன் புக்கிங்!

முதல்வர் தலைமையில் ஆலோசனை:

தமிழகத்தில் சிலிண்டர் தேவை, கையிருப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், எரிவாயுவுக்கு பதில் மின் அடுப்பு பயன்படுத்துவதற்காக யூனிட்டுக்கு ரூ.2 மின்சார மானியமாக வழங்கப்படும். மத்திய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு இருக்கும் வரை இந்த சலுகை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் பயன்பாடு குறித்து ஆராயப்படாது:

எரிவாயு தட்டுப்பாட்டை சீர்செய்வது தொடர்பாக பலதரப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், உணவகங்களில் எதற்காக மின் பயன்பாடு அதிகரித்தது என்று ஆராயப்படாது என்றும் சென்னையில் மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25 சதவிகிதம், அதிகபட்சமாக ரூ.3.05 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

மேலும் படிக்க: கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை: தமிழகத்தில் திருமணங்கள் பாதிக்குமா? – வெளியான தகவல்

கூடுதல் மண்ணெண்ணெய்:

நாட்டில் உள்ள 60,698 தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இசைவின்றி மாற்று எரிவாயுவைப் பயன்படுத்தலாம். பொது விநியோகத் திட்டத்தில் 3228 கிலோ லிட்டர் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடையூறின்றி 194 உழவர் சந்தைகளில் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்யலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
மே 2-ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..