தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் நிலவும் பனிமூட்டம்..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் நிலவும் பனிமூட்டம்..

கோப்பு புகைப்படம்

Published: 

26 Feb 2026 06:25 AM

 IST

வானிலை நிலவரம், பிப்ரவரி 26, 2026: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவிழந்தது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ்மட்ட சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரக்கூடிய நாட்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிப்ரவரி 26ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம் முழுவதும் பரந்த வானிலை நிலவக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு:

அதேபோல், பிப்ரவரி 27 மற்றும் 28ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரக்கூடிய மார்ச் 3ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும், வறண்ட வானிலை மட்டுமே நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர்… அண்ணாமலை காட்டம்!

அதிகாலையில் நிலவும் பனிமூட்டம்:

பனிமூட்டத்தைப் பொருத்தவரையில், பிப்ரவரி 26ஆம் தேதி (இன்று) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பிப்ரவரி 27ஆம் தேதி (நாளை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 3 மாவட்டங்களில் புதிதாக மினி டைடல் பூங்காக்கள்… 1800 பேருக்கு வேலைவாய்ப்பு… முழு விவரம் இதோ!

வெப்பநிலை எப்படி இருக்கும்?

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் இரவு நேர வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 35.8 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 35.6 டிகிரி செல்சியஸ், கரூரில் 36.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 32.7 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 31.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
நாய் நக்கிய காயம்: செப்சிஸால் நான்கு உறுப்புகள் துண்டிப்பு – அதிர்ச்சி சம்பவம்
பழைய ஸ்மார்ட்போனில் ஒளிந்திருக்கும் அரிய பொக்கிஷம்.. இந்தியாவின் 'அணு இறையாண்மைக்கு' உதவும் இ-கழிவு மறுசுழற்சி!
கொள்ளையர்களை விரட்டிய என்.ஆர்.ஐ பெண் – லூதியானாவில் பரபரப்பு சம்பவம்
"ரியல் கேரளா ஸ்டோரி".. 2 வாரங்களாக மெட்ரோ தூணில் தவித்த பூனை பத்திரமாக மீட்பு!