மக்களே இதை நோட் பண்ணூங்க.. இன்றும் நாளையும் அரசு இ சேவை மையம் செயல்படாது..

E - Seva Centre: இ சேவை மையம் என்பது அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கப்படுகிறது. இதனால் மக்கள் தொடர்ச்சியாக இது தொடர்பாக புகார் அளித்திருந்தனர். இந்த சூழலில் தற்போது மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் காரணமாக இரண்டு நாட்கள் இ சேவை மையம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

மக்களே இதை நோட் பண்ணூங்க.. இன்றும் நாளையும் அரசு இ சேவை மையம் செயல்படாது..

கோப்பு புகைப்படம்

Published: 

31 Dec 2025 07:50 AM

 IST

சென்னை, டிசம்பர் 31, 2025: மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் காரணமாக, டிசம்பர் 31, 2025 மற்றும் ஜனவரி 1, 2026 ஆகிய இரண்டு நாட்களில் இ – சேவை ஆதார் மையங்கள் செயல்படாது என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV) தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வாயிலாக, ‘இ – சேவை’ இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, பட்டா மாறுதல், இருப்பிட சான்று, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உட்பட பல வகை சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வேளாண் பயிர் காப்பீட்டிற்கான பதிவும் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக ஆதார் தொடர்பான சேவைகள் அனைத்தும் இந்த இ சேவை மையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த இ சேவை மையம் என்பது அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கப்படுகிறது. இதனால் மக்கள் தொடர்ச்சியாக இது தொடர்பாக புகார் அளித்திருந்தனர். இந்த சூழலில் தற்போது மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் காரணமாக இரண்டு நாட்கள் இ சேவை மையம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு நாட்கள் இ சேவை மையம் மூடல்:

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும் இயங்கி வரும் இ-சேவை ஆதார் மையங்களில் பயன்படுத்தப்படும் மைய மென்பொருள் அமைப்புகளில் பராமரிப்பு (Maintenance) மற்றும் தணிக்கை (Audit) பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த இரண்டு நாட்களிலும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க பிரத்யேக செயலி.. இன்று அறிமுகம் செய்கிறார் மு.க.ஸ்டாலின்..

இ-சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகள்:

  • தமிழகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் பல்வேறு அரசு சேவைகளை எளிதாகப் பெற்றுவருகின்றனர். குறிப்பாக,
  • ஆதார் பதிவு, திருத்தம் (பெயர், முகவரி, கைபேசி எண் மாற்றம்)
  • வருமானச் சான்று, சமூகச் சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று
  • குடும்ப அட்டை சேவைகள்
  • ஓய்வூதிய தொடர்பான விண்ணப்பங்கள்
  • மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துதல்
  • அரசுத் துறைகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள்

போன்ற பல்வேறு சேவைகள் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்:

இந்த சேவைகள் அனைத்தும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களில் கிடைக்காது என்பதால், பொதுமக்கள் அவசர தேவைகள் இருப்பின் அதற்கு முன்பாக அல்லது ஜனவரி 2, 2026 முதல் மீண்டும் சேவைகள் தொடங்கிய பின்னர் இ-சேவை மையங்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சேவைகள் மீண்டும் எப்போது?

பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் முடிவடைந்ததும், ஜனவரி 2, 2026 முதல் வழக்கம்போல் அனைத்து இ-சேவை ஆதார் மையங்களும் இயல்பான நேரங்களில் செயல்படும் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

10வது மாடியில் இருந்து விழுந்த நபர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரியம்..
60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்.. அவரது ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்..
விசா நேர்காணல்களை ரத்து செய்த அமெரிக்கா - இந்தியா கவலை
பாகிஸ்தானில் பணக்கார இந்து பெண்.. யார் இவர்? நிகர மதிப்பு என்ன தெரியுமா?