வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்.. தமிழர்களின் அவசர உதவிக்காக எண்கள் அறிவிப்பு..

Israel-Iran War Tension: புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது. மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்.. தமிழர்களின் அவசர உதவிக்காக எண்கள் அறிவிப்பு..

அவசர உதவிக்காக எண்கள் அறிவிப்பு

Updated On: 

01 Mar 2026 08:52 AM

 IST

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவப் படைகள் ஈரான் மீது ஒருங்கிணைந்த ராணுவத் தாக்குதலைத் தொடுத்துள்ளன. இந்தத் தாக்குதல்களால் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களும், அந்நாட்டின் ராணுவ நிலைகளும் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. இச்சூழ்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம் ‘ஆப்பரேஷன் பிராமிஸ் 4’ (Operation Promise 4) என்ற பெயரில் புதிய போர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் அமைந்துள்ள குவைத், கத்தார், சவுதி அரேபியா, அபுதாபி மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிக்க: Iran-US-Israel : ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் மரணத்தை அறிவித்த ட்ரம்ப்

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்:

போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தமிழக அரசின் அயலத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக வெளியிடப்பட்டுள்ள 24/7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

புது டெல்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்:

011-24193300 (Land line)
92895 16712 (Mobile Number with Whatsapp)

அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:

இந்தியாவிற்குள் – 1800 309 3793
வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு – +91 80 6900 9901

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு:

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நிலைமை தீவிரமாக கண்காணிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேவையான உதவிகளை வழங்க தயார்:

தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது. மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது. போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24×7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.

இதையும் படிக்க: ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மரணத்தை உறுதி செய்த ஈரான் ஊடகங்கள்!

மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Follow Us
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்
இந்திய சாதி அமைப்பை உள்வாங்கிய AI.. எழும் கவலைகள்..
இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..