சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
New Chennai Traffic Plan: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, காந்தி மண்டபம் சந்திப்பில் மே 21, 2025 முதல் புதிய போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது. ராஜ்பவன் - மத்திய கைலாஷ் வழித்தடத்தில் வாகனங்கள் மேம்பாலம் வழியாக மட்டுமே செல்ல அனுமதி. சர்வீஸ் சாலையில் இடது திரும்பு மட்டுமே அனுமதி. சிஎல்ஆர்ஐ பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

சென்னை மே 21: சென்னையில் போக்குவரத்து நெரிசலை (Chennai Traffic Issue) குறைக்கும் வகையில் கிண்டி -காந்தி மண்டபம் சந்திப்பில் இன்று (2025 மே 21) முதல் போக்குவரத்து மாற்றம் (Traffic change) அமலுக்கு வருகிறது. ராஜ்பவனில் இருந்து மத்திய கைலாஷ் (From Raj Bhavan to Madhya Kailash) நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் காந்தி மண்டபம் மேம்பாலம் வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். சர்வீஸ் சாலையில் நுழையும் வாகனங்கள் சந்திப்பில் இடதுபுறம் திரும்பவேண்டும்; நேராக செல்ல அனுமதியில்லை. சிஎல்ஆர்ஐ பேருந்து நிறுத்தம், அடையாறு நோக்கி முன்னே நகர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் சோதனை அடிப்படையில் நடைமுறை படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
மாநகரமான சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஸ்கள், புறநகர் ரயில்கள், மின்சார ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு பொது போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், முக்கிய சந்திப்புகளில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இதைச் சரிசெய்ய, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, நகரத்தில் போக்குவரத்து பாதிப்பு அதிகம் ஏற்படும் சாலைகள் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு வருகின்றன.
காந்தி மண்டபம் சந்திப்பில் புதிய போக்குவரத்து மாற்றம்
அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, சிஎல்ஆர்ஐ, குழந்தைகள் பூங்கா, காந்தி மண்டபம் ஆகியவை அருகிலுள்ள முக்கிய இடங்களாக இருப்பதால், கிண்டி காந்தி மண்டபம் சந்திப்பில் வாரத்தின் எல்லா நாள்களிலும் போக்குவரத்து நெரிசல் உச்சத்தை எட்டுகிறது. இதைத் தடுக்க, மே 21ஆம் தேதி (புதன்கிழமை) முதல் சோதனை அடிப்படையில் புதிய போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
🚦 Traffic Alert
To ease congestion at Gandhi Mandapam Junction, GCTP will implement traffic modifications on a trial basis from 21.05.2025.
Plan your commute accordingly. #ChennaiTraffic #TrafficUpdate pic.twitter.com/w0YIGuzbgX— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) May 20, 2025
புதிய பயண திசை வழிமுறைகள்
ராஜ் பவனில் இருந்து சர்தார் படேல் சாலையில் மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் மாநகரப் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் காந்தி மண்டபம் (ஐஐடி) மேம்பாலத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
காந்தி மண்டபம் சர்வீஸ் சாலையில் நுழையும் வாகனங்கள், சந்திப்பில் இடதுபுறமாகவே திரும்ப வேண்டும்; நேராக மத்திய கைலாஷ் நோக்கி செல்ல அனுமதி இருக்காது. இதற்காக, சிஎல்ஆர்ஐ பேருந்து நிறுத்தம், அங்கு இருந்து அடையாறு நோக்கி சற்று முன்னோக்கி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்
இந்த மாற்றங்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவற்றை கடைபிடித்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்து போதிய நேரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சாலைகளில் பதாகைகள், காவலர் வழிகாட்டல் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.