இந்த 4 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Rain Alert : மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள குமரி பெருங்கடல் பகுதிகளில் மேலடுக்கு காற்றழுத்தச் சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, நவம்பர் 8 : தமிழ்நாட்டில் நவம்பர் 8, 2025 அன்று பல இடங்களில் மிதமானது முதல் கனமழை (Heavy Rain) வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள குமரி பெருங்கடல் பகுதிகளில் மேலடுக்கு காற்றழுத்தச் சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதில் குறிப்பாக கன்னியாகுமரி (Kanniyakumari), திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வானிலை நிலவரம்
நாளை தென் தமிழ்நாட்டில் சில இடங்களில், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மலைப்பகுதிகளில் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் நவம்பர் 9, 2025 அன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்க : 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ரிப்போர்ட்..
நவம்பர் 12 ஆம் தேதி கனமழை வாய்ப்பு
வருகிற நவம்பர் 12ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று வானம் பெரும்பாலான நேரம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடையில்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : சென்னையில் குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி பலி…. டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் கடலாடி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் வனமாதேவி, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லார், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தூத்துக்குடி, கடலூர் எஸ்ஆர்சி குடிதாங்கி, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.