கனமழை எதிரொலி…. இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நவம்பர் 24, 2025 அன்று பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை (Heavy Rain) தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும் இது நவம்பர் 22, 2025 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி (Tirunelveli) பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நவம்பர் 24, 2025 அன்று பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையைப் பொறுத்து மேற்கொண்டு முடிவெடுக்க முடியும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : ‘ஓயாத ரீல்ஸ் மோகம்’.. எச்சரிக்கையை மீறி திருச்செந்தூர் கோவிலில் நடனமாடிய இளைஞர்கள்!!
தேர்வுகள் ஒத்திவைப்பு
இந்த நலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நவம்பர் 24, 2025 அன்று நடைப்பெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து தேர்வுகள் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்கள் தேர்வு எழுவது கடினம் என்பதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பர் 26, 2025 அன்று புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு சென்யார் என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்யார் என்ற பெயருக்கு அரபு மொழியில் சிங்கம் என்று அர்த்தம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
இந்த நிலையில் கனமழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களுக்கு நவம்பர், 2025 அன்று மிக கனமழை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கையாக தமிழக பேரிடர் மேலாண்மை 2 அணியினர் தூத்துக்குடியும் ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு அணியும் மேற்பார்வை செய்து வருகின்றனர். மேலும், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.