தமிழகத்தில் கடும் பனிப் பொழிவு.. வரும் நாட்கள் எப்படி இருக்கும்? பனி அலெர்ட் இதோ!
Heavy Snowfall In Tamil Nadu Disrupts Normal Life Of The Public: தமிழகத்தில் அதிகளவு பெய்து வரும் பனிப் பொழிவால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் ஊட்டி போல தமிழகத்தின் மற்ற பகுதிகளும் மாறி உள்ளது.

தமிழகத்தில் கடும் பனிப்பொழிவு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிக அளவு பனிப் பொழிவு இருந்து வருகிறது. இதனால், அதிகாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர், விவசாயிகள், வியாபாரிகள் என பல தரப்பட்ட மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் அந்த பனியின் தாக்கும் குறைந்த பாடில்லை. பகல் நேரத்தில் பனிக் காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) முதல் வருகிற டிசம்பர் 28- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பனி மூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் அடுதத் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொருத்த வரை, அதிகாலை வேளையில் நகர்ப் புறங்களில் பனி மூட்டம் காணப்படும் என்று கூறியுள்ளது.
உறைப் பனி எச்சரிக்கை விடுப்பு
நகரப் பகுதியின் அதிக பட்ச வெப்ப நிலை 29 டிகிரி செல்சியஸ்- ஆகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ்- ஆகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பகுதிகளில் இரவு அல்லது அதிகாலை வேலைகளில் உறைப் பனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: இலங்கையில் சிறை வைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்கள்…53 நாள்களுக்கு பிறகு விடுவிப்பு!
குறைந்த பட்ச வெப்பநிலை 2.3 டிகிரி செல்சியஸ் வரை குறையும்
மேலும், வரும் டிசம்பர் 29- ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் குறைந்த பட்ச வெப்ப நிலை இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறையக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவ மழை பெய்யும் காலமாகும். அதன்படி, இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை பெரியளவில் பெய்யவில்லை.
உறைப் பனி காலமாக மாறியது
சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் பலத்த மழை பெய்தது. இலங்கை பகுதியில் உருவான புயல் ஆந்திரா நோக்கி சென்ற போது, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. அதன் பிறகு மழைப் பொழிவு தொடர்ச்சியாக இல்லை. ஆனால், தமிழகம் முழுவதும் பனிப் பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் உறை பனி அதிக அளவு படர்ந்துள்ளது. மற்ற பகுதிகளிலும் அதிகளவு பனிப் பொழிவு இருந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மழையும் இருக்கு பனியும் இருக்கு.. எத்தனை நாட்களுக்கு? வானிலை சொல்வது என்ன?