Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப நிலை அதிகரிக்கும், கனமழையும் தொடரும்…

Tamil Nadu Weather Alert: சென்னை வானிலை மையம் 2025 ஜூன் 10 முதல் 12 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 38°C வரை உயரக்கூடும்.

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப நிலை அதிகரிக்கும், கனமழையும் தொடரும்…
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புImage Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 07 Jun 2025 06:31 AM

தமிழ்நாடு ஜூன் 07: தமிழகத்தில் 2025 ஜூன் 10 முதல் 12 வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 10ம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் கனமழை ஏற்கப்படும். ஜூன் 11ம் தேதி தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்கள் தாக்கப்படும். ஜூன் 12ம் தேதி வேலூர், திருவள்ளூர் பகுதிகளில் மழை சாத்தியம் உள்ளது. இதற்கிடையே சென்னை உள்ளிட்ட இடங்களில் மேகமூட்டம், இடியுடன் மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 38°C வரை உயர வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 10 – 12 வரை சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 2025 ஜூன் 10 முதல் 12 வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேலே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இந்த மழை ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், 2025 ஜூன் 9 முதல் 12 வரை தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஜூன் 10-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

2025 ஜூன் 11-ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், 2025 ஜூன் 12-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் பகுதிகளிலும் கனமழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

 

 

ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்

மேலும், 2025 ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இன்று சென்னை பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 102 ஃபாரன்ஹீட் (38°C), குறைந்தபட்சம் 82 ஃபாரன்ஹீட் (28°C) இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

2025 ஜூன் 06 நேற்று காலை 8.30 மணி முதல் 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை நீலகிரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. செருமுள்ளி, பிரையர் எஸ்டேட் பகுதிகளில் 2 செ.மீ., பில்லிமலை எஸ்டேட், கிளன்மார்கன் பகுதிகளில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.