AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ramadoss : நீங்கள் நினைக்கும் அணியில் பாமக இருக்கும்.. கூட்டணி குறித்த கேள்விக்கு ராமதாஸ் விளக்கம்!

Ramdoss Denies PMK-BJP Alliance Talks | பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் சென்னையில் இன்று (ஜூன் 07, 2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக - பாமக கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அதை பற்றி நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Ramadoss : நீங்கள் நினைக்கும் அணியில் பாமக இருக்கும்.. கூட்டணி குறித்த கேள்விக்கு ராமதாஸ் விளக்கம்!
ராமதாஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Jun 2025 14:01 PM IST

சென்னை, ஜூன் 07 : உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் (Home Minister Amit Shah) தமிழகம் வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி (PMK – Paatali Makkal Katchi) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) கூட்டணி உறுதியாகுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள  பாட்டாளிம் மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், அதை பற்றி நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். மேலும், பாட்டாளி மக்கள் உட்கட்சி விவகாரம் மற்றும் மகன் அன்புமனி உடனான சிக்கல்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 07, 2025) காலை விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் சென்னைக்கு செல்கிறேன். அங்கு தான் எனது மகள்கள், குழந்தைகள் இருக்கின்றனர். செவ்வாய் கிழமை செய்தியாளர்களை சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அப்போது நான் பாஜகாவுக்காக இங்கு வரவில்லை என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டு இருக்கிறது என்று கூறினார்.

அதை பற்றி நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை – ராமதாஸ்

இந்த நிலையில், சென்னை வந்த அவர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் கடந்த முறை தமிழகம் வந்த போது அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. தற்போது மீண்டும் அமித்ஷா தமிழகம் வருகிறார். இந்த நிலையில், பாஜக – பாமக கூட்டணி உறுதியாகுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில அளித்த ராமதாஸ், எனக்கு தெரியாது. அதைப்பற்றி நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அப்போது சென்னை வந்திருக்கும் நிலையில், அன்புமணி ராமதாஸை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராமதாஸ் யாரையும் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டு வரவில்லை. பல் வலியால் பல் மருத்துவரை பார்க்க வந்துள்ளேன் என்று கூயுள்ளார். கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. நீங்கள் நினைக்கும் அணியில் பாமக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us