அரையாண்டு விடுமுறை.. ஜன. 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..

School Leave: சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் திரும்பி வருவதற்கு ஏதுவாக விடுமுறை நாட்களை நீட்டிக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரக்கூடிய ஜனவரி 4, 2026 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும், ஜனவரி 5, 2026 முதல் பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை.. ஜன. 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

22 Dec 2025 23:06 PM

 IST

சென்னை, டிசம்பர் 22, 2025: பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து, வரக்கூடிய டிசம்பர் 25ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2026 ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த நாள் வெள்ளிக்கிழமை என்பதாலும், அதனைத் தொடர்ந்து வரும் நாட்கள் வார இறுதி நாட்களாக இருப்பதாலும்,

சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் திரும்பி வருவதற்கு ஏதுவாக விடுமுறை நாட்களை நீட்டிக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரக்கூடிய ஜனவரி 4, 2026 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும், ஜனவரி 5, 2026 முதல் பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம்.. குழந்தைகளுக்கு நோ எண்ட்ரி.. மீறினால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு..

அரையாண்டு விடுமுறை:

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்த பிறகு 24-12-2025 (புதன்கிழமை) முதல் 04-01-2026 (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 05-01-2026 (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம்.

மேலும் படிக்க: வீடற்றோர்களுக்கு இரவு நேர காப்பகம்.. 15 அத்தியாவசிய பொருட்கள் – திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்:

மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். இசை, நடனம் மற்றும் ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும். தாத்தா, பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும். மேலும், பெரியோர்களை மதிக்கவும், அவர்களுக்கு உதவி செய்யவும் மாணவர்களை பழக்குங்கள்.

அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை