3,935 காலி பணியிடங்களுக்காக இன்று நடக்கும் குரூப் 4 தேர்வு.. 13 லட்சம் பேர் எழுதுகின்றனர்..
TNPSC Group 4 Exam: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப் 4 பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி தரப்பில் இன்று, அதாவது குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு, ஜூலை 12, 2025: தமிழ்நாடு முழுவதும் இன்று அதாவது ஜூலை 12 2025 தேதியான இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதிலும் இருந்து 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாடு அரசு தரப்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு 2025 ஏப்ரல் மாதம் வெளியானது. தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக க்ரூப் தேர்வுகள் நடத்தப்படும். இதில் குரூப்-1 குரூப் 2 குரூப் 4 என பல்வேறு பிரிவுகளாக பிரித்து தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப் 4 பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஜூலை 12 2025 தேதியான இன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
குரூப் 4 தேர்வு எழுதும் 13 லட்சம் பேர்:
சுமார் 3 ஆயிரத்து 935 காலி பணியிடங்களுக்காக 5,26,553 ஆண்களும், 8,63,068 பெண்களும், 117 திருநங்கைகள் என மொத்தமாக 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் இந்த தேர்வை தமிழகம் முழுவதும் எழுதுகின்றனர். இதற்காக தமிழகத்தில் மொத்தம் 4,922 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பொறுத்த வரையில் இந்த தேர்வினை 94 ஆயிரத்து 848 பேர் எழுதுகின்றனர்.
Also Read: சட்டமன்ற தேர்தலில் மதிமுக-வுக்கு திமுக 10 சீட்டுகளை ஒதுக்க வேண்டும்… துரை வைகோ
குரூப் 4 தேர்வுக்காக மாவட்டம் தோறும் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தேர்வினை கண்காணிக்கும் பணிகளில் பறக்கும் படையும் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
என்னென்ன கட்டுப்பாடுகள்:
தேர்வு எழுத வரக்கூடிய தேர்வாலர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்வு மையத்திற்கு சரியாக 9:00 மணிக்குள் வரவேண்டும், 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்களை அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல் தேர்வர்கள் கண்டிப்பாக தங்களுடன் அனுமதிச்சீட்டு மற்றும் ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் போன்ற ஏதேனும் ஒன்றை நகலெடுத்து செல்ல வேண்டும்.
Also Read: அதிமுக உட்கட்சி விவகாரம்.. எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..
தேர்வர்கள் அனைவரும் பிளாக் இங்க் பால் பாயிண்ட் பெண் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் விடைத்தாள் உபயோகிக்கும் முறை குறித்து அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வர்கள் எடுத்துச் செல்லக்கூடாது. மீறினால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் இந்த தேர்வு முறையை வீடியோ மூலம் ரெக்காட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.