காதல் ஜோடியை வீடு புகுந்து தாக்கிய பெண் வீட்டார்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

Girl's Parent Brutally Attacked Her Lover's Family | தூத்துக்குடியில் இளம் பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண் வீட்டார், அவரின் காதலன் வீட்டிற்குள் நுழைந்து இளம் பெண் மற்றும் அவரது காதலரின் குடும்பத்தினரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

காதல் ஜோடியை வீடு புகுந்து தாக்கிய பெண் வீட்டார்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Published: 

11 Jan 2026 08:45 AM

 IST

தூத்துக்குடி, ஜனவரி 11 : தூத்துக்குடி (Tuticorin) மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள போலையார்புரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் மகன் ராஜேஷ் என்ற 28 வயது இளைஞர். இந்த இளைஞரும், அவரது உறவினர் சாந்தகுமார் என்பவரின் மகள் ஜெபாஸ்லின் விஜி என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இந்த காதலுக்கு இளம் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த இரண்டு குடும்பங்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததன் காரணமாக அது இவர்களின் காதலுக்கு மிகப்பெரிய தடையாக இருந்துள்ளது.

வீடு புகுந்து தாக்கி மிரட்டல் விடுத்த இளம் பெண்ணின் குடும்பத்தார்

இந்த நிலையில், சம்பவத்தன்று ஜெபாஸ்லின் தனது சகோதரர் தன்னை தாக்குவதாக கூறி காதலன் ராஜேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொட்ர்ந்து அவரது தாய் ஜெசிந்தா மற்றும் சகோதரர்கள் யாபேஸ் மற்றும் யானிஸ் ஆகியோரும் ராஜேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இளம் பெண்ணை தங்களுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து காதலன் வீட்டில் இருந்துள்ளார்.

இதையும் படிங்க : 16வது நாளாக நீடிக்கும் போராட்டம்.. ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.. சென்னையில் பரபரப்பு

இது ஜெபாஸ்லின் குடும்பத்தாருக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மூன்று பேரும் இணைந்து ராஜேஷ் வீட்டை அடித்து உடைத்துள்ளனர். அதனை தட்டி கேட்ட ராஜேஷ் மற்றும் அவரது தந்தை கனகராஜ் ஆகியோரையும் ஜெபாஸ்லின் குடும்பத்தார் மிக கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமன்றி, அவர்கள் ராஜேஷின் குடும்பத்தாருக்கு கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடும்பம்

காதலியின் குடும்பத்தார் தாக்கியதன் காரணமாக காயமடைந்த ராஜேஷ், அவரது தந்தை கணகராஜ் மற்றும் காதலி ஜெபாஸ்லின் ஆகியோர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஜெபாஸ்லினின் தாய் மற்றும் சகோதாரர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!