அதிகாலையில் நடந்த கொடூரம் – ஒன்றன்பின் ஒன்றாக மோதிய வாகனங்கள்… சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி

Major accident at Hosur : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அக்டோபர் 12, 2025 அன்று அதிகாலையில் சரக்கு வாகனம், கார், லாரி என ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலையில் நடந்த கொடூரம் - ஒன்றன்பின் ஒன்றாக மோதிய வாகனங்கள்... சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி

மாதிரி புகைப்படம்

Published: 

12 Oct 2025 07:50 AM

 IST


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  (Hosur) அருகே அக்டோபர் 12, 2025 அன்று அதிகாலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பிக்கப் மேன் மோதியதாக தெரிகிறது. இதனையடுத்து அதன் பின் வந்த கார் மற்றும் லாரி ஒன்றன் பின் ஒன்றாக வந்து மோதியது. இந்த விபத்தில் வேனுக்கும் லாரிக்கும் காருக்கும் இடையில் கார் சிக்கி நசுங்கியது இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இநத விபத்தில் காயமடைந்த ஒருவரை காவல்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

விபத்தில் 4 பேர் பலி

ஓசூரில் அக்டோபர் 12, 2025 அன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்திருக்கிறது. இந்த நிலையில் ஓசூர் அருகே அந்த கார் வந்தபோது, அதற்கு முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனமும் பிக்கப் லாரியும் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. இதனால் கட்டுப்பாட்டை இழந்த காரும், பிக்கப் வேன் மீது மோதியது.

இதையும் படிக்க : காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி.. பறிபோன உயிர்.. தூத்துக்குடியில் சம்பவம்

எதிர்பாராத இந்த விபத்தில் காரின் பின்னால் வந்த லாரியும் கார் மீது மோதியிருக்கிறது. இதனால் கார் நசுங்கி அதில் பயணித்த 5 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் தற்போது மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து வழக்குப்திவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓசூர் பகுதியில் நிகழும் தொடர் விபத்துகள்

இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபர்பபை ஏற்படுத்தியிருக்கிறது. டிரைவர் மதுபோதையில் இருந்தனால் இந்த விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதிலும் இருந்து இங்கு சரக்கு வாகனங்கள் சென்று வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது அப்பகுதியில் சகஜமாகி வருகிறது.

இசையும் படிக்க : 15 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. சிக்கிய பைக் மெக்கானிக்!

இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித கலக்கத்துடனே செல்லும் நிலை இருக்கிறது. சரக்கு வாகனங்கள், லாரிகள் செல்ல தனி வழி உருவாக்க வேண்டும், வாகனங்கள் செல்ல நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக இருந்து வருகிரது. மேலும் இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு ஏற்பட்டால் மட்டுமே விபத்து ஏற்படுவது குறையும் என வாகன ஓட்டிகளின் எண்ணமாக இருக்கிறது.