அஜித் குமார் வழக்கில் புதிய திருப்பம்.. புகார் அளித்த நிகிதா குறித்து வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி தகவல்கள்!
Sivaganga Custodial Case : திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளது தெரியவந்துள்ளது. வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததாக 2011ஆம் ஆண்டு நிகிதா மீது வழக்குப்பதிவு செய்தது எப்ஐஆர் மூலம் தெரியவந்துள்ளது.

பெண் நிகிதா
சிவகங்கை, ஜூலை 02 : சிவகங்கையில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமார் (Sivaganga Custodial Case) மீது புகார் அளித்த பெண் நிகிதா மீது மோடி புகார் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக மதுரை திருமங்கலம் காவல் நிலையத்தில் நிகிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அரசு ஆசிரியர், விஏஓ வேலை வாங்கி தருவதாக கூறி நிகிதா பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே மடப்புரம் கிராமத்தில் உள்ள கோயில் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் 27 வயதான அஜித் குமார். இந்த கோயிலுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற பெண்ணும், அவரது தாயாரும் காரில் வந்துள்ளனர். அந்த காரை ஓரமாக நிறுத்த வேண்டும் என நிகிதா கூறியிருக்கிறார். அதற்கு அஜித் குமார் தனக்கு கார் ஓட்ட தெரியாததாக கூறி, ஒருவரை காரை இயக்க சொல்லி ஓரமாக நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. சுவாமி தரிசனம் செய்துவிட்டு நிகிதா வந்துள்ளார்.
சிவகங்கை இளைஞர் மரணம்
அப்போது, அவரது காரில் வைத்திருந்த 9 சவரன் நகை காணாமல் போனதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார், அஜித் குமாரை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர்.
அதன்பிறகு அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டினர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பகா 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோக்களும் வெளியானது. பல இடங்களில் அஜித் குமாரை கொண்டு சென்று போலீசார் கடுமையாக தாக்கியதாகவும், மிளகாய் பொடியை வாயில் போட்டும் சித்ரவதை செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
புகார் அளித்த நிகிதா குறித்து வெளிவந்த உண்மை
இப்படியான சூழலில், அஜித் குமார் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதவாது, அஜித் குமார் மீது புகார் அளித்த பெண் நிகிதா மீது மோடி புகார் இருப்பது எப்ஐஆர் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, நிகிதா மீது கடந்த 2011ஆம் ஆண்டு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது வெளியாகி உள்ளது.
2011ஆம் ஆண்டு ஆசிரியர் பணி, விஏஒ பணி வேலை வாங்கித் தருவதாக கூறி, நிகிதா மோசடியில் ஈடுபட்டுள்ளதகாவும் கூறப்படுகிறது. மேலும், ராஜாங்கத்திடம் பல்வேறு தவணையாக நிகிதா ரூ.16 லட்சத்தை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. பணத்தை வாங்கிக் கொண்டு நிகிதா வேலை வாங்கி கொடுக்கவில்லை என ராஜாங்கம் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், நிகிதா, அவரது தாய் சிவகாமி, தந்தை பகத் சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் மூலம், அஜித் குமார் திருட்டு புகார் கொடுத்தது உண்மையா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், விரைவில் நிகிதா மற்றும் சிவகாசி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.