ரீல்ஸ் என்பது வாழ்க்கை அல்ல.. கல்வி தான் ரியல் வாழ்க்கை – மாணவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்..

Deputy CM Udhayanidhi Stalin: Instagram, YouTube போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. ரீல்ஸ் வாழ்க்கை இல்லை; அதில் வருவது பெரும்பாலும் பொய்யான வாழ்க்கையே. மாணவர்கள் இதில் நேரம் கழிப்பதை விட்டு, ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரீல்ஸ் என்பது வாழ்க்கை அல்ல.. கல்வி தான் ரியல் வாழ்க்கை - மாணவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்..

கோப்பு புகைப்படம்

Published: 

15 Nov 2025 06:40 AM

 IST

நவம்பர் 15, 2025: மாணவர்கள் மணிக்கணக்கில் ரீல்சை பார்த்து நேரத்தை வீணாக்காமல், ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தைகள் தினத்தை ஒட்டி காரைக்குடி அழகப்பா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. அதாவது குழந்தைகள் தினம், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குதல், சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்குதல் என முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.ஆர். பெரியகருப்பன், மையநாதன், உள்ளிட்டோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அவர், சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும், அதில் வருவது பெரும்பாலும் பொய்யான உலகம் என்றும் அறிவுரை வழங்கினார்.

பெண்களை படிக்க வைப்பது தான் திராவிட மாடல் அரசு – உதயநிதி ஸ்டாலின்:

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் 5.35 கோடி சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதில் 57 ஆயிரம் மாணவிகள், மாணவர்களை விட கூடுதலாக பயன்பெறுகின்றனர். திராவிடம் மாடல் அரசில் மாணவிகள் அதிக அளவில் பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர்; இதுதான் இந்த அரசின் வெற்றி. அனைத்து பெண்களையும் படிக்க வைத்தது திராவிட இயக்கம்தான். 100 ஆண்டுகள் போராட்டம், தியாகத்துக்கு பிறகுதான் இந்த நிலையை அடைந்தோம். ஒரு குடும்பத்தின் ஏழை நிலையை நீக்கக்கூடிய ஒரே ஆயுதம் கல்விதான்.

மேலும் படிக்க: கார்த்திகை தீபம் விடுமுறை… சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எங்கிருந்து தெரியுமா?

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு:

பெரியவர்களை விட அதிக சிந்தனைத் திறன் கொண்டவர்கள் குழந்தைகள். சொல்லப்போனால் பெற்றோருக்கு குழந்தைகள்தான் ஆசிரியர்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தொடர்ந்து பகுத்தறிவை வலியுறுத்தினர். உலக நாடுகளோடு போட்டி இடக்கூடிய அளவிற்கு நாம் வளர்ந்து உள்ளோம். தமிழகத்தில் தினசரி 22 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. ‘தமிழ்புதல்வன்’, ‘புதுமைப்பெண்’ திட்டங்கள் மூலம் 8 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மீண்டும் இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் செயல்பாட்டுக்கு வருகிறது.

மேலும் படிக்க: திருப்போரூர் அருகே வெடித்து சிதறிய பயிற்சி விமானம்… பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானிகள்

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்விக்கென அதிக திட்டங்களை வகுத்த வருகிறார்.

ரீல்ஸ் வாழ்க்கை அல்ல – கல்வி தான் ரியல் வாழ்க்கை:

Instagram, YouTube போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. ரீல்ஸ் வாழ்க்கை இல்லை; அதில் வருவது பெரும்பாலும் பொய்யான வாழ்க்கையே. மாணவர்கள் இதில் நேரம் கழிப்பதை விட்டு, ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும். உண்மையான வாழ்க்கை என்பது கல்விதான்.

ஆசிரியர்கள் உடற்கல்வி வகுப்பின் போது பாடத்தை எடுக்கக்கூடாது; முடிந்தால் அதிக நேரத்தை அதற்காக ஒதுக்கி, மாணவர்களின் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவ வேண்டும். கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடல்நிலையும் மாணவர்களுக்கு அவசியமானது என அவர் பேசியுள்ளார்.