டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

Delta Districts will Have Heavy Rain | வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

மழை எச்சரிக்கை

Updated On: 

21 Nov 2025 09:07 AM

 IST

சென்னை, நவம்பர் 21 : வங்கக்டலில் (Bay of Bengal) புதியதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி (New Low Pressure Area) உருவாகியுள்ள நிலையில், இன்று (நவம்பர் 21, 2025) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் (Tamil Nadu Weatherman Pradeep John) தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை

இன்று கலை 8.30 மணி முதல் நாளை (நவம்பர் 22, 2025) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் மற்றும் விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்றை விட இன்று டெல்டா மாவட்டங்களில் மழையின் தீவிரம் சற்று அதிகாமக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற தவறுவது ஏன்? முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக பொருளாளர் திலகபாமா கேள்வி

18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தேனி, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம் ஆகிய 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கோவை, மதுரைக்கு ஏன் மெட்ரோ இல்லை.. இது தான் காரணம்.. விளக்கம் கொடுத்த மத்திய அரசு

இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் – பிரதீப் ஜான்

டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் தூத்துக்குடி, நாமநாதபுரம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழகத்தில் இன்று எந்த மாவட்டங்களிலும் மிக கனமழை மற்றும் மிக மிக கனமழைக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?