கோவை மக்களே! பில்லூர் அணை திறப்பு: பவானி ஆற்றுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
Pillur Dam Opens: கோவை பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பவானி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றங்கரையை நெருங்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சிறுவானி அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால், கோவை குற்றாலம் பகுதிக்கு வெள்ள அபாயம் உள்ளது.

பவானி ஆற்றுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கோயம்புத்தூர் மே 26: கோவை பில்லூர் அணை (Coimbatore Billur Dam) முழு கொள்ளளவை எட்டியதால் அதன் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை (Flood warning issued for areas of the Bhavani River) விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், மின் உற்பத்திக்காக நீர் திறக்கப்படுகிறது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சிறுவானி அணையிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கோவை குற்றாலம் பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பில்லூர் அணை திறப்பு: பவானி ஆற்றுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோயம்புத்தூரில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவாக அதிகரித்ததால், அணையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பில்லூர் அணை திறக்கப்படுவதால் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
கோவை குற்றாலம் பகுதிக்கு வெள்ள அபாயம்
பில்லூர் அணையின் மொத்த உயரம் 100 அடி. இதில் 97.5 அடியை நீர் எட்டினால் உடனடியாக திறக்கப்படும். கடந்த சில நாட்களாக 70 அடிக்கு கீழாக இருந்த நீர்மட்டம், தொடர்ந்து பெய்த மழையால் மேம்பட்டு 2025 மே 25 நேற்று காலை 86 அடியாக உயர்ந்தது. நீர் வரத்து விநாடிக்கு 3 கனஅடி அளவில் இருந்தது. மின் உற்பத்திக்காக தற்போது விநாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் 2 மதகுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
சிறுவானி அணையின் நீர்மட்டமும் உயரம்: கோவை குற்றாலம் பகுதிக்கு வெள்ள அபாயம்
பில்லூர் அணையின் போன்று, கோவையின் மற்றொரு முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவானி அணையிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 50 அடி உயரமுள்ள இவ்வணையில் பாதுகாப்பு கருதி 44.61 அடிக்கு மேல் நீர் சேமிக்கப்படுவதில்லை. நேற்று முன்தினம் 19 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது 21.55 அடியாக உயர்ந்துள்ளது.
கனமழை தொடரும் வாய்ப்பு
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெயிலால் 17 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 19.2 அடியாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் கனமழை தொடரும் வாய்ப்பு உள்ளதால், மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை குற்றாலம் பகுதியில் தற்காலிகமாக பொதுமக்கள் நுழைய தடை
இதனிடையே, கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கோவை குற்றாலம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கோவை குற்றாலம் பகுதிகள் தற்காலிகமாக பொதுமக்கள் நுழைய தடையாக மூடப்பட்டுள்ளன என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.