மாநிலங்களை தண்டிப்பதன் மூலம் வளர முடியாது – ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு..

MK Stalin Post: ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், “ தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி குறைப்பு, சரி பாதி அளவு மாநில அரசுகளின் பங்குகளில் இருந்து தான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை மத்திய அரசு மறைப்பதால் நான் கூற கடமை பட்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மாநிலங்களை தண்டிப்பதன் மூலம் வளர முடியாது - ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

23 Sep 2025 14:04 PM

 IST

சென்னை, செப்டம்பர் 23, 2025: “ஒரு பக்கம் ஜிஎஸ்டி வரி குறைத்தாலும், மற்றொரு பக்கம் பாஜக அரசு மாநிலங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதியை தர மறுத்து வருகிறது. அதே காரணத்திற்காக ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது,” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புதிதாக அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் செப்டம்பர் 22, 2025 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் பொதுமக்கள் சற்றேனும் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மில்லியன் கணக்கான இந்தியர்களின் நிதிசுமை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முறையில், பால் மற்றும் புரோட்டின் பவுடர், மருத்துவ காப்பீடு, உயிர்காக்கும் மருந்துகள் போன்ற முக்கிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிய கார்கள், டிவி மற்றும் ஏர் கண்டிஷனர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28% நுகர்வு வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு:

அதேபோல, முடிக்கான எண்ணெய், சோப்பு மற்றும் ஷாம்பு போன்ற பொதுவான பொருட்களுக்கு, 12% அல்லது 18% ஆக இருந்த ஜிஎஸ்டி, 5% என்ற குறைந்தபட்ச வரியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தால் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: பால் முதல் நெய் வரை… ஜிஎஸ்டி வரி குறைப்பு – ஆவின் பால் பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு

குறிப்பாக 33 உயிர்காக்கும் மருந்துகளின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னா, பன்னீர் போன்ற பொருட்களுக்கு முன்பு 5% ஜிஎஸ்டி இருந்த நிலையில் தற்போது முற்றிலுமாக ஜிஎஸ்டி நீக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிறிதளவு நிம்மதி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு நிதி ஒதுக்காதது ஏன்? முதல்வர் கேள்வி


இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், “ஜிஎஸ்டி வரி குறைப்பாலும், வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்தியதாலும், இந்தியர்கள் ரூ. 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கலாம் என பிரதமர் கூறியுள்ளார். இதைத்தான் தொடக்கத்திலிருந்தே எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தோம். 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாய்களை சேமித்திருக்க முடிந்திருக்கும்.

மேலும் படிக்க: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி மாற்றம்.. விலை குறைந்த பொருட்கள்!

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி குறைப்பு, சரி பாதி அளவு மாநில அரசுகளின் பங்குகளில் இருந்து தான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை மத்திய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும், இதனை சுட்டிக்காட்டுவது எனது கடமையாகிறது. தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. ,” என அவர் தெரிவித்துள்ளார்.