புதுமாப்பிள்ளை மாரடைப்பால் பலி.. மனைவியுடன் தியேட்டரில் படம் பார்த்தபோது நடந்த சம்பவம்!
Chennai Youth Dies of Heart Attack : சென்னையில் மந்தவெளியில் தியேட்டரில் மனைவியுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தியேட்டரில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததை அடுத்து, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். திருமணமான ஒரு மாதத்திலேயே புதுப்மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரிப்படம்
சென்னை, ஜூலை 15 : சென்னையில் தியேட்டரில் மனைவியுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த, இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திருமணமாகி ஒரு மாதங்களே ஆன நிலையில், இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப நாட்களில் மாரடைப்பால் இளைஞர்கள் பலரும் உயிரிழந்து வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, கொரோனாவுக்கு பிறகு, திடீர் மாரடைப்பால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. ஆனால், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் இதுபோன்று திடீரென மாரடைப்புகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறகின்றனர். அதிகமாக மது அருந்துவது, புகைப் பிடிப்பது, தீவிரமாக உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறை போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர்.
இருப்பினும், இளைஞர்களின் திடீர் மாரடைப்புக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவவில்லை. இந்த சூழலில் தான், சென்னையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, சென்னையில் தியேட்டரில் மனைவியுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த, இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சென்னை மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் மெல்வின் (29). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணுடன் 2025 ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது.
Also Read : சென்னையில் பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு.. தறிகெட்டு ஓடி விபத்து.. ஒருவர் பலி!
புதுமாப்பிள்ளை மாரடைப்பால் பலி
இந்த நிலையில், 2025 ஜூலை 13ஆம் தேதி மெல்வின் மற்றும் அவரது மனைவியும் சிறுசேரி அருகே உள்ள மாலில் தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளனர். 2025 ஜூலை 13ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் இவர்கள் இருவரும் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென மெல்வினுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது. திருமணமான ஒரு மாதத்திலேயே புதுப்மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read : காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு கசிவு: கர்ப்பிணி, அவருடைய மகளும் உயிரிழப்பு
தொடரும் உயிரிழப்புகள்
முன்னதாக, 2025 ஜூலை 13ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் மாநகர பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தார். பேருந்து சென்றுக் கொண்டிருக்கும்போதே, ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தவர் மீது பேருந்து மோதியது. இதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.