Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை: திருவான்மியூர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்

Thiruvanmiyur Sinkhole: திருவான்மியூரில் உள்ள டைடல் பார்க் அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் ஒரு கார் கவிழ்ந்தது. காரில் பயணித்த ஐந்து பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மெட்ரோ ரயில் பணியால் இந்த பள்ளம் ஏற்பட்டதா என சந்தேகம் எழுந்தாலும், மெட்ரோ நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. நிலத்தடி கழிவுநீர் கால்வாய் காரணமாக பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் போக்குவரத்தை கடுமையாக பாதித்தது.

சென்னை: திருவான்மியூர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்
சென்னை டைடல் பார்க் அருகே திடீர் பள்ளம்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 18 May 2025 13:59 PM

சென்னை மே 17: சென்னை டைடல் பார்க் சந்திப்பில் ஏற்பட்ட திடீர் சாலை பள்ளம் ஒரு பெரிய விபத்தை உருவாக்கியிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக சிறுவர்கள் உட்பட காரில் இருந்த ஐந்து பேரும் உயிர்தப்பினர்.  திருவான்மியூரில் டைடல் பார்க் (Tidal Park in Thiruvanmiyur) அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் ஒரு கார் கவிழ்ந்து விழுந்தது; மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த சம்பவம் போக்குவரத்தையும் பொதுமக்கள் சுமுகத்தையும் பாதித்தது. மெட்ரோ ரெயில் சுரங்க பணியால் (Due to metro rail mining work) பள்ளம் ஏற்பட்டது என சந்தேகம் எழுந்தது. ஆனால், சம்பவ இடம் சுரங்க பணிக்கு 300 மீட்டர் தூரம் என மெட்ரோ நிர்வாகம் விளக்கம் (Metro Administration Description) அளித்தது. கழிவுநீர் கால்வாய் அருகே இருந்ததால் நிலத்தடி இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

திருவான்மியூரில் திடீரென ஏற்பட்ட பள்ளம்

சென்னை திருவான்மியூர் அருகே, டைடல் பார்க் அருகிலுள்ள சிக்னல் சாலையில் 2025 மே 17 இன்று திடீரென ஒரு பெரிய பள்ளம் உருவானது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பள்ளத்தில் ஒரு கார் கவிழ்ந்து விழுந்தது. விபத்து நடந்ததும் அந்த காரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வாடகை காரில் பயணித்தனர். டைடல் சிக்னல் அருகே வந்தபோது, திடீரென சாலையில் பெரிய பள்ளம் உருவானது. அந்த பள்ளத்தில் கார் வீழ்ந்தது.

பள்ளத்தில் சிக்கிய கார்

ஓட்டுநருக்கு சிறிய காயம்

ஓட்டுநருக்கு சிறிய காயம் ஏற்பட்டது தவிர, மற்ற அனைவரும் எந்தவிதமான காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். வாகனமும் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. விபத்துக்குள்ளானவர்களை அருகிலிருந்த பொதுமக்கள் துரிதமாக காப்பாற்றி மீட்டனர். பின்னர், காவல் துறையினர் உடனடியாக தடுப்பு கருவிகளை அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மெட்ரோ ரெயில் சுரங்க பணியால் ஏற்பட்டதாக சந்தேகம்

இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்த பள்ளம் மெட்ரோ ரெயில் சுரங்க பணியால் ஏற்பட்டதாக சந்தேகம் வெளியிட்டனர். ஆனால், விபத்து நடந்த இடத்தில் இருந்து சுரங்கப் பணி நடைபெறும் இடம் சுமார் 300 மீட்டர் தொலைவில் தான் உள்ளதாகவும், இந்த சம்பவத்திற்கும் மெட்ரோ ரெயில் பணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மெட்ரோ ரெயில் பணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை

சம்பவத்திற்கும் மெட்ரோ ரெயில் பணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், பள்ளம் ஏற்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில், நிலத்தடி இடிந்தே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பார்க்கப்படுகிறது.