Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

சென்னை மக்களே கவனிங்க.. 72 இடங்களில் மினி பேருந்து சேவை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?

Chennai Mini Bus Services : சென்னையில் மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 11 வழித்தடங்களில் மினி பேருந்து சேவை 2025 ஜூன் 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக ஐடி காரிடரான துரைப்பாக்கம், ஓஎம்ஆர் உள்ளிட்ட இடங்களிலும் மினி பேருந்து சேவை இயக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே கவனிங்க.. 72 இடங்களில் மினி பேருந்து சேவை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?
மினி பேருந்துImage Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Jun 2025 16:40 PM

சென்னை, ஜூன் 18 : தமிழ்நாடு முழவதும் 3,100க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மினி பேருந்து சேவை  (Mini Bus Service) தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் 2025 ஜூன் 16ஆம் தேதி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு பெரிதும் உதவும். குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மினி பேருந்து சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. இதில் தலைநகர் சென்னையில் 72 வழித்தடங்களில் மினி பேருந்து  (Chennai Mini Bus Service) சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து சேவைகளில் முக்கியமான பேருந்து சேவை. சென்னையில் பேருந்து சேவையை அதிகரித்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் எங்கெங்கு மினி பேருந்து சேவை?

இதற்காக பலவகையான பேருந்துகளை இயக்கி வருகிறது.  சாதாரண பேருந்து, தாழ்தள பேருந்து, மகளிர் விடியல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  தற்போது மினி பேருந்து சேவை 72 வழித்தடங்களில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 11 வழித்தடங்களுக்கு மட்டுமே தற்போது பேருந்து சேவை இயக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன என்பதை பார்ப்போம்.

அதன்படி, நொளம்பூர் பேருந்து நிலையம் முதல் பருத்திப்பட்டு செக்போஸ்ட் வரையும், கோவிலம்பாக்கம் முதல் காமாக்ஷி மருத்துவமனை வழித்தடத்திலும், போரூர் சுங்கக்சாவடி முதல் ராமாபுரம் டிஎல்எஃப் வழித்தடத்திலும், கைவேலி பாலம் முதல் மடிப்பாக்கம் கூட் சாலை வரை, ஈச்சங்காடு முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையம் வழித்தடத்திலும், ஆதம்பாக்கம் ரயில் நிலையம் முதல் ஈச்சங்காடு சந்திப்பு வழித்தடத்திலும் மினி பேருந்து  சேவை இயக்கப்படுகிறது.

சென்னை மினி பேருந்து சேவை

மேலும், வளசரவாக்கத்தில் உள்ள லாமேச் பள்ளி முதல் மதுரவாயலில் உள்ள மீனாட்சி அரசு மருத்துவமனை வரையும், ஓஎம்ஆர் சர்வீஸ் சாலை, காரப்பாக்கம் முதல் துரைப்பாக்கம் 200 அடி சாலை வரையும்,  சோழிங்கநல்லூர் முதல் தொரைப்பாக்கம் வரையும், அம்பத்தூர் டன்லப் பேருந்து நிலையம் முதல் பம்மத்துக்குளம் வரையும், ஆழ்வார் திருநகர் முதல் அகரம் மெயின் ரோடு வரையும் மினி பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை மட்டுமின்றி, கிருஷ்ணிகிரியில் 13 வழித்தடங்களிலும், மதுரையில் 32 வழித்தடங்களில், தஞ்சயில் 15 வழித்தடங்களிலும், திருப்பத்தூரில் 10 வழித்தடங்களிலும், ஓசூரில் 15 வழித்தடங்களிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 வழித்தடங்களிலும் உள்ளிட்ட 3,103 வழித்தடங்களில் மினி பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.  இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மாவட்டங்களில்  மினி பேருந்து சேவை இயக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவுகிறது குறிப்பிடத்தக்கது.

சாலையோரத்தில் கிடந்த மர்ம பொருள்.. ராஜஸ்தானில் பரபரப்பு
சாலையோரத்தில் கிடந்த மர்ம பொருள்.. ராஜஸ்தானில் பரபரப்பு...
லேப்டாப்பை யூஸ் செய்யும் பெண்களா நீங்கள்..? இந்த பிரச்சனை வரலாம்!
லேப்டாப்பை யூஸ் செய்யும் பெண்களா நீங்கள்..? இந்த பிரச்சனை வரலாம்!...
போன் செய்யும்போது நெட்டை ஆனில் வைத்திருக்கிறீர்களா?
போன் செய்யும்போது நெட்டை ஆனில் வைத்திருக்கிறீர்களா?...
திமுக கூட்டணியில் ஓட்டையா? புதிய புயலை கிளப்பிய வைகை செல்வன்
திமுக கூட்டணியில் ஓட்டையா? புதிய புயலை கிளப்பிய வைகை செல்வன்...
சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.. உயர்நீதிமன்றம்..
சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.. உயர்நீதிமன்றம்.....
சிஎஸ்கே வெளியிடும் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆவணப்படம்!
சிஎஸ்கே வெளியிடும் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆவணப்படம்!...
மந்திர ஒலிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த குரோஷியா
மந்திர ஒலிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த குரோஷியா...
6 இடத்தில் சதம் அடித்த வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை..
6 இடத்தில் சதம் அடித்த வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை.....
40 வயதுக்கு மேற்பட்டவரா? இந்த பரிசோதனைகள் செய்வது கட்டாயம்!
40 வயதுக்கு மேற்பட்டவரா? இந்த பரிசோதனைகள் செய்வது கட்டாயம்!...
கொடிக் கம்பம் நட்டால் கட்டணம் வசூல்.. உயர்நீதிமன்றம் அறிவுரை!
கொடிக் கம்பம் நட்டால் கட்டணம் வசூல்.. உயர்நீதிமன்றம் அறிவுரை!...
திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு
திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு...