27 ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும்.. உதகையில் உறைபனி தொடரும் – வானிலை எப்படி இருக்கும்?

Tamil Nadu Weather Update: குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைவாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நீலகிரி மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் உறைப்பனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும்.. உதகையில் உறைபனி தொடரும் - வானிலை எப்படி இருக்கும்?

கோப்பு புகைப்படம்

Published: 

23 Dec 2025 06:38 AM

 IST

வானிலை நிலவரம், டிசம்பர் 23, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வரும் சூழலில், வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவினாலும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

ஆனால், டிசம்பர் 24, 2025 மற்றும் டிசம்பர் 25, 2025 ஆகிய இரண்டு நாட்களில் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், தமிழகத்தின் உள் பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவக்கூடும் என்றும், அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், டிசம்பர் 26 அன்று தென் தமிழக மற்றும் கடலோர மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அரையாண்டு விடுமுறை.. ஜன. 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..

டிசம்பர் 27-ஐப் பொறுத்தவரையில், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 28 அன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைவாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நீலகிரி மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் உறைப்பனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதகையில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை:

அதே சமயத்தில், தமிழகத்தைப் பொறுத்தவரையில், உதகையில் தொடர்ந்து குறைந்த வெப்பநிலை பதிவாகி வருவதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவை பொறுத்தவரையில், உதகையில் 6.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் ஹாசனில் 7.5 டிகிரி செல்சியஸ், கேரள மாநிலம் இடுக்கியில் 7.6 டிகிரி செல்சியஸ், கொடைக்கானலில் 7.9 டிகிரி செல்சியஸ், குன்னூரில் 8 டிகிரி செல்சியஸ் மற்றும் வால்பாறையில் 8.5 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம்.. குழந்தைகளுக்கு நோ எண்ட்ரி.. மீறினால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு..

தென்னிந்தியாவை பொறுத்தவரையில், உதகையிலேயே குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். வரக்கூடிய நாட்களிலும் இதே போன்ற வானிலை நிலை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை