தமிழகத்தில் இருந்து விலகும் வடகிழக்கு பருவமழை.. இனி மழை இருக்காது – வானிலை சொல்வது என்ன?

Tamil Nadu Weather Update: வரக்கூடிய அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து விலகும் வடகிழக்கு பருவமழை.. இனி மழை இருக்காது - வானிலை சொல்வது என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

16 Jan 2026 15:33 PM

 IST

வானிலை நிலவரம், ஜனவரி 16, 2026: வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தைப் பொருத்தவரையில், அக்டோபர் 16, 2025 அன்று அது தொடங்கியது. இந்த பருவமழைக் காலத்தில், அக்டோபர் மாதத்தில் குறிப்பாக வங்கக்கடலில் உருவான மௌன்டா புயலின் காரணமாக நல்ல மழை பதிவானது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மூன்றாம் வாரம் வரை தென் தமிழகத்தில் நல்ல மழை பதிவாகியது.

வட கிழக்கு பருவமழை:

ஆனால், வடகடலோர தமிழக பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக மட்டும் அவ்வப்போது மிதமான மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் டிட்லி புயல் உருவானது. இதன் காரணமாக, டிசம்பர் முதல் வாரத்தில் வடகடலோர தமிழக மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பதிவானது.

இந்த இரண்டு புயல்களின் காரணமாக, சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஆறு சதவீதம் அதிகமாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பாலமேடு ஜல்லிக்கட்டு.. சீறி பாயும் காளைகள், அடக்கும் வீரர்கள்.. முன்னிலை நிலவரம்!!

தமிழகத்தில் இருந்து விலகும் வடகிழக்கு பருவமழை:

இந்த சூழலில், வரக்கூடிய அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஜனவரி 16, 2026 தேதியான இன்று முதல் ஜனவரி 22, 2026 தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில், ஒரு சில இடங்களில் மட்டும் லேசான பனிமூட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தவெகவின் அடுத்தக் கட்ட பாய்ச்சல்…10 பேர் கொண்ட குழுவை இறக்கிய விஜய்!

அதிகரிக்கும் வெப்பநிலை:

குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், இடைநிலை நிலைதான் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாக இருந்த நிலையில், தற்போது அது படிப்படியாக உயர்ந்து அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories
பாலமேடு ஜல்லிக்கட்டுடன் சன்‌ஃபீஸ்ட் சூப்பர்மில்க் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
பாசிசவாதிகளை விரட்டி தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..
கடலூரில் காவலர்களை அரிவாளால் வெட்டிய ரெளடி…துப்பாக்கி குண்டுகளை இறக்கிய போலீசார்!
அதிமுக அலுவலகத்தில் செயலாளர் தூக்கிட்டு தற்கொலை…என்ன காரணம்…போலீசார் விசாரணை!
புகாரை திரும்ப பெறக் கோரி மிரட்டல்…பெண் இன்ஸ்பெக்டர் கைது…மற்றொருவருக்கு வலைவீச்சு!
வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை…முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்!
ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்