மழையும் இருக்கு பனியும் இருக்கு.. எத்தனை நாட்களுக்கு? வானிலை சொல்வது என்ன?

Tamil Nadu Weather Update: குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையக்கூடும் என தெரிவித்தார். அதேபோல், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மழையும் இருக்கு பனியும் இருக்கு.. எத்தனை நாட்களுக்கு? வானிலை சொல்வது என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

26 Dec 2025 06:15 AM

 IST

வானிலை நிலவரம், டிசம்பர் 26,2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 26 டிசம்பர் 2025 தேதியான இன்று, ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், வரக்கூடிய அடுத்த இரண்டு நாட்கள், அதாவது டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் மட்டும் பனிமூட்டம் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வைகுண்ட ஏகாதசி… இந்த ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு:

டிசம்பர் 29 அன்று தென் கடலோர தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகப் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி வரை இதே சூழல் தொடரும் என்றும், அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவித்தார்.

மேலும் படிக்க: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதையாத்திரை சென்ற 3 பெண் பக்தர்கள் – கார் மோதி பலி

ஊட்டி கொடையில் உறைபனி தொடரும்:

குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையக்கூடும் என தெரிவித்தார். அதேபோல், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவித்தார். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும் என தெரிவித்தார்.

சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?