அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு என பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பநிலையின் தாக்கமும் சற்றுக் குறைந்துள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

கோப்பு புகைப்படம்

Published: 

06 Sep 2025 16:14 PM

 IST

வானிலை நிலவரம், செப்டம்பர் 6, 2025: கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் பல இடங்களிலும் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாபலிபுரம் (செங்கல்பட்டு) 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் கும்பகோணம் (தஞ்சாவூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), மணல்மேடு (மயிலாடுதுறை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை:

அதேபோல், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 6, 2025 (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7, 2025 (நாளை) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நடுரோட்டில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்.. செருப்பால் அடித்த விசிக நபர்.. பரபரப்பு!

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 8, 2025 அன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 9, 2025 அன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

குறைந்த வெப்பநிலை:

அதேபோல் செப்டம்பர் 10, 2025 அன்று சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பநிலையின் தாக்கமும் சற்றுக் குறைந்துள்ளது.

மேலும் படிக்க: திருமணத்திற்கு முந்தைய நாள் காதலியுடன் வீட்டை விட்டு ஓடிய மணமகன்.. மணமகள் வீட்டார் ஷாக்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாலை முதல் நள்ளிரவு வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு நல்ல மழை பதிவாகி வருகிறது. அதேபோல், அதிகபட்ச வெப்பநிலையும் பகல் நேரங்களில் 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.