10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் செப்டம்பர் 16, 2025 இன்று ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்..

கோப்பு புகைப்படம்

Published: 

16 Sep 2025 14:59 PM

 IST

வானிலை நிலவரம், செப்டம்பர் 16, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் நல்ல மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், செப்டம்பர் 15, 2025 நள்ளிரவு முதல் விடியவிடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும், தென்னிந்தியாவின் மீது வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மீது வளிமண்டல மேல்டுக்குச் சுழற்சியும் காணப்படுகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் 16, 2025 இன்று ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் கனமழை:

அதேபோல், செப்டம்பர் 17, 2025 நாளை மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ரூட்டை மாத்தும் விஜய்.. பிரச்சார பயணத்தில் மாற்றம்.. இனி இப்படி தான் இருக்கும்

செப்டம்பர் 18, 2025 அன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், செப்டம்பர் 19, 2025 அன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 22, 2025 வரை தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகவா? – இபிஎஸ்க்கு டிடிவி தினகரன் பதிலடி!

அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் மழை – பிரதீப் ஜான்:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல்பொழுதில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இரவு அல்லது மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மழையின் காரணமாக வெப்பநிலையும் கணிசமாக குறைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, அடுத்த மூன்று நாட்களுக்கு வடதமிழகம் மற்றும் சென்னை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.