9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு தொடரும்? வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: ஜனவரி 25, 2026 தேதியான இன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு தொடரும்? வானிலை ரிப்போர்ட்..

கோப்பு புகைப்படம்

Published: 

25 Jan 2026 06:15 AM

 IST

வானிலை நிலவரம், ஜனவரி 25, 2026: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர தமிழக பகுதிகளில் ஜனவரி 23ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று பிற்பகல் முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது கனமழையும், மிதமான மழையும் பதிவாகி வருகிறது. இந்தச் சூழலில், தமிழகம்–இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பதிவாகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

அந்த வகையில், ஜனவரி 25, 2026 தேதியான இன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வேலூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு – 2 தொழிலாளர்கள் பரிதாப பலி

ஜனவரி 26, 2026 தேதியான நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரக்கூடிய ஜனவரி 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று அதிகரிக்கும் வெப்பநிலை:

குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றாலும், ஒரு சில இடங்களில் சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: போலீஸ் வாகனத்தில் பிரபல ரவுடியை கொலை செய்ய முயற்சி… போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு – பரபரப்பு சம்பவம்

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்? – பிரதீப் ஜான்:

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை இருக்கக்கூடும் என்றும், இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு மழையிலிருந்து ஒரு இடைவெளி ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?