மரத்தில் சிக்கிய காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன்… பின்னர் நடந்த விபரீதம்…!

Chennai Avadi Tragedy: ஆவடி ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த 10 வயது கார்த்திக், காற்றாடி பிடிக்க முயன்றபோது இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். தாயுடன் பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்திருந்த போது, மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். மரத்தில் சிக்கிய காற்றாடியை எடுக்கச் சென்றபோது விபத்து நிகழ்ந்தது. சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

மரத்தில் சிக்கிய காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன்... பின்னர் நடந்த விபரீதம்...!

காத்தாடி

Published: 

24 Jun 2025 11:06 AM

 IST

சென்னை ஜூன் 24: சென்னை ஆவடி (Chennai Avadi) ராமலிங்கபுரத்தை சேர்ந்த 10 வயது கார்த்திக் (Karthick), காற்றாடி எடுக்க முயன்றபோது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். தாயுடன் பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றிருந்த போது மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்கச் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பினர். ஆனால், சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார். ஆவடி போலீசார் (Avadi Police) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்; இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி பகுதியில் சோகம் ஏற்படுத்திய விபத்து

சென்னை அருகே ஆவடி ராமலிங்கபுரம் பகுதியில், மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற 10 வயது சிறுவன் கார்த்திக், இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ராஜ்குமார் – எமிலியம்மாள் தம்பதியரின் ஒரே மகனான கார்த்திக், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். 2025 ஜூன் 23 ஆம் தேதி நேற்று மதியம் தாயுடன் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த சிறுவன், அங்கு உள்ள இரண்டாவது மாடியில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.

மரத்தில் சிக்கிய காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன்

அந்த நேரத்தில் அருகிலுள்ள மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுத்துத் தர முயன்ற கார்த்திக், சமநிலையை இழந்து மாடியில் இருந்து கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், 2025 ஜூன் 24 ஆம் தேதி இன்று காலை சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரான சம்பவம் குடும்பத்தினரிடமும், அப்பகுதி மக்களிடமும் ஆழ்ந்த சோகத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

காற்றாடி – சிறுவர்களுக்கு ஏற்படும் அபாயங்கள்

காற்றாடி பிடிக்கச் செல்லும் சிறுவர்கள், அதிகப்படியான உற்சாகத்தினால் பாதுகாப்பை மறந்துவிடும் சூழ்நிலைகள் அதிகம். மரங்கள், மாடிகள், கட்டிடங்கள் மீது ஏறி காற்றாடியை பிடிக்க முயல்வது, தவறி விழும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மின்கம்பிகள் அருகே காற்றாடி பறக்கச் செய்வது, மின்சாரம் தாக்கும் பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும்.

சில நேரங்களில் சாலை இடங்களில் ஓடி செல்லும் போது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படலாம். கண்ணில் நேரடியாக காற்றாடி மஞ்சா (கம்பி) படுவதால் காயங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பெற்றோர் வழிகாட்டி பாதுகாப்பான இடங்களில் மட்டுமே சிறுவர்கள் காற்றாடி பறக்கச் செய்ய வேண்டும்.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை