சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவானது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் மழை தொடரும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

19 Sep 2025 06:10 AM

 IST

வானிலை நிலவரம் – செப்டம்பர் 19, 2025: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 18, 2025 அன்று, மாலை முதல் இரவு முழுவதும் நகரின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவானது. குறிப்பாக ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாம்பரம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரம் கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இதே சமயம் தென்னிந்தியாவின் மேல் ஒரு வளிமண்டல கீழ்மட்டச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (செப்டம்பர் 19, 2025) திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: அமித் ஷா – எடப்பாடி பழனிசாமியின் 30 நிமிட சந்திப்பு – உண்மையில் என்ன நடந்தது?

அதேபோல், நாளை (செப்டம்பர் 20, 2025) சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21, 2025 அன்று நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 24, 2025 வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொடரும் மழை:


சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. பிரதீப் ஜான் சொல்வது என்ன?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மழையின் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை மெதுவாகக் குறைந்து வருகிறது.

மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – எப்படி டவுன்லோடு செய்வது?

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 35.0 டிகிரி செல்சியஸ், குருத்தணியில் 34.2 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36.5 டிகிரி செல்சியஸ், கரூரில் 35.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னைப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் 36.0 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 35.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர் கடந்தளவு மழை பதிவாகியுள்ளதாகவும், இந்த மழை வரும் நாட்களிலும் தொடரும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.