பராமரிப்பு பணிகள் காரணமாக 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து.. இயக்கப்படும் 17 சிறப்பு ரயில்கள்.. முழு விவரம்..
Cancellation Of Electric Trains: சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் 23ஆம் தேதி, காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 20, 2025: சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் வரும் நவம்பர் 23, 2025 அன்று காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழித்தடம் வழியாக செல்லும் 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் தெரிவித்துள்ளது. மக்கள் பெரிதும் பாதிக்காத வகையில், வரும் நவம்பர் 23, 2025 — ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 8 மணி நேரம் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அலுவலக நாள் அல்லாத நாளில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மக்கள் பாதிப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் 23ஆம் தேதி, காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வலுப்பெறக்கூடும் என கணிப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள் :
As part of ongoing engineering works, Line Block/power Block is permitted in #Chennai Central – #Arakkonam section for the commissioning of the Electronic Interlocking Panel at #Tiruninravur Yard on 23rd November 2025 #RailwayUpdate pic.twitter.com/3W1zprbETA
— DRM Chennai (@DrmChennai) November 17, 2025
சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து :
- காலை 5:40, 6:10, 9:05 மணிக்கு திருவள்ளூர் நோக்கி புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து.
- அதேபோல் பிற்பகல் 1:05 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் ரத்து.
- நண்பகல் 12:10 மணிக்கு புறப்பட்டு திருத்தணிக்கு செல்லும் மின்சார ரயிலும் ரத்து.
சென்னை சென்ட்ரலில் இருந்து :
- காலை 9:55, 11:45, பிற்பகல் 2:15 மணிக்கு திருத்தணி செல்லும் ரயில்கள் ரத்து.
- நண்பகல் 12:40, 1:25 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில்கள் ரத்து.
- காலை 10:30 மணிக்கு கடம்பத்தூர் செல்லும் ரயிலும் ரத்து.
அரக்கோணம் நிலையத்திலிருந்து :
- காலை 6:40, 7:10, 11:15 மதியம் 12:40 மணிக்கு சென்ட்ரல் நோக்கி புறப்படும் ரயில்கள் ரத்து.
திருநின்றவூரிலிருந்து :
- காலை 7:55 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரயில் ரத்து.
திருத்தணியில் இருந்து :
- பிற்பகல் 12:35 மணிக்கு சென்ட்ரல் வரும் ரயில் ரத்து.
இதனுடன் திருநின்றவூர் வழித்தடம் வழியாக இயக்கப்படும் மொத்தம் 49 மின்சார ரயில்கள் அன்றைய தினம் ரத்து செய்யப்படுகின்றன.
இயக்கப்படும் 17 சிறப்பு ரயில்கள் :
49 ரயில்கள் ரத்து செய்யப்படும் காரணத்தினால் 17 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- காலை 6:30, 8:20, 11:00 — சென்ட்ரலிலிருந்து அரக்கோணம்
- காலை 7:00, 7:25, 9:10 — சென்ட்ரல்–திருத்தணி
- காலை 10:45 — சென்ட்ரல்–ஆவடி
- காலை 9:00 — சென்ட்ரல்–திருப்பதி
- காலை 8:15, 8:55, 10:00 — அரக்கோணம்–சென்ட்ரல்
- காலை 7:00 — திருவள்ளூர்–சென்ட்ரல்
- காலை 10:15 — திருத்தணி–சென்ட்ரல்
- காலை 6:20, 7:37, 8:00 — அரக்கோணம்–கடற்கரை
- காலை 8:50 — திருத்தணி–கடற்கரை
- காலை 11:15, நண்பகல் 12:50, 1:40, மாலை 3:45 — திருவள்ளூர்–திருத்தணி
- நண்பகல் 12:15, மாலை 3:00 — திருவள்ளூர்–அரக்கோணம்
- காலை 10:30, 11:15, நண்பகல் 12:00, 1:30, 2:15 — அரக்கோணம்–திருவள்ளூர்
- நண்பகல் 12:35 — திருத்தணி–திருவள்ளூர்
இந்த சிறப்பு ரயில்கள் அந்த நாளில் பயணிகளுக்கான சிரமத்தைக் குறைப்பதற்காக இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.