சென்னை விட்டு நகராத ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தொடரும் கனமழை.. நிலவரம் என்ன?
Chennai Rains: டிசம்பர் 2, 2025 தேதியான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கனமழை பதிவாகக்கூடும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 94.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், டிசம்பர் 2, 2025: தென்மேற்கு வங்கக் கடலில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நிலைகொண்டு உள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து வடகிழக்கே 140 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூரிலிருந்து வடகிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூரிலிருந்து தென்-தென்கிழக்கே 170 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த சமயத்தில், வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையிலிருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதி குறைந்தபட்சம் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
நகராமல் ஒரே இடத்தில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்ற
இது மேலும், வட தமிழ்நாட்டிற்கு இணையாக வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 1, 2025 தேதியான நேற்று நள்ளிரவிலிருந்து இன்று அதிகாலைவரை சென்னை கடற்கரையிலிருந்து குறைந்தது 30 கிலோமீட்டர் தூரத்தில் மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டிட்வா புயல் பாதிப்பு.. உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு..
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாத மழை:
டித்வா புயல் வலுவிழந்த நிலையில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருப்பது காரணமாக, நேற்று அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாது மழை பதிவாகி வருகிறது. மிதமான மழை தொடர்ந்தாலும், அவ்வப்போது கனமழையாகவும், ஒரு சில இடங்களில் அதிக கனமழையாகவும் பதிவாகியுள்ளது.
சென்னை திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்:
முதலில் வானிலை ஆய்வு மையம் சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் மாலை 5 மணிக்குப் பிறகு சில இடங்களில் அதிக கனமழை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் அது ரெட் அலர்ட் எச்சரிக்கையாக மாற்றப்பட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலைக்கொண்டு புதிய மழை மேகங்களை உருவாக்கி வருவதால் மழை தொடர்ந்து வருகிறது.
மேலும் படிக்க: மழைக்கால பாதிப்பை தடுக்க கிண்டி ரேஸ் கிளப்பில் 4 குளங்கள்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..
இன்றும் மழை நீடிக்கும்:
இந்த சூழலில், டிசம்பர் 2, 2025 தேதியான இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கனமழை பதிவாகக்கூடும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 94.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 53.5 மில்லி மீட்டர் மற்றும் சென்னை நகரத்தில் 99.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை தொடருமா, குறையுமா என்பது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வைப் பொறுத்தே கணிக்க முடியும்.