Tamil Nadu CM MK Stalin: அரைத்த மாவையே அரைக்கும் அதிமுக.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
Arakkonam Arms Seizure: அரக்கோணத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு பதிலளித்து, அதிமுகவின் ஆட்சிக்கால சம்பவங்களை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி Vs முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 27: கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரக்கோணத்தில் வாகன சோதனையின்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் (Dravida Munnetra Kazhagam) நகர மன்ற உறுப்பினர்களான தினேஷ் குமார் மற்றும் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வாகன சோதனையின்போது அவர்களிடம் இருந்து ரிவால்வர், ஏர்கன், தோட்டாக்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami), திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கிகள் எப்படி வந்தது என்ற கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin)..? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறி கொண்டிருப்பதற்கு, ஒரு நல்ல முதலமைச்சராக இருந்தால் வெட்கி தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமியின் கருத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
சென்னையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை பற்றி குறை கூற எதிர்கட்சித் தலைவருக்கு எதையும் கிடைக்கவில்லை. இதனால், அவர் அரைத்த மாவையே அரைத்தது போல் இதையே மாறி மாறி கூறி கொண்டு இருக்கிறார். இதையடுத்து, அவருக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு நான் வெள்ளை கொடியுடன் போனதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் நான் டெல்லிக்கு வெள்ளை கொடி, காவி கொடி என எதையும் கொண்டு போகவில்லை. அதிமுக கொள்ளை அடித்த ஆட்சி. ஏற்கனவே, அவர்களது ஆட்சியில் சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற சம்பவங்கள் நடந்தது. இதனால், வீண்பிற்கு செய்துக்கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன..?
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி உள்ளது. போதை இளைஞரிடம் கத்தி, பள்ளி மாணவர்களின் ஸ்கூல் பைகளில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ளது.
இதைத் தானே, இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன்?! இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது? இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் அதிமுகவிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன்- உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா? ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு- காக்கப்படுகிறதா? அப்படியெனில், #யார்_அந்த_SIR ? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது!” என்று தெரிவித்தார்.