Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமித்ஷாவை சந்திக்கும் ஈபிஎஸ்.. மீண்டும் இணையுமா அதிமுக – பாஜக கூட்டணி?

EPS Meet Amit Shah | இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். இதன் மூலம் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அமித்ஷாவை சந்திக்கும் ஈபிஎஸ்.. மீண்டும் இணையுமா அதிமுக – பாஜக கூட்டணி?
அமித்ஷாவுடன் ஈபிஎஸ்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 11 Apr 2025 08:10 AM

சென்னை, ஏப்ரல் 11 : இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ள பாரதிய ஜனத கட்சி (BJP – Bharatiya Janata Party) முக்கிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK – Anaithinthiya Anna Dravida Munnetra Kazhagam) பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election) விரைவில் வரவுள்ள நிலையில், இன்றைய (ஏப்ரல் 11, 2025) சந்திப்பில் கூட்டணி குறித்து பேச வாய்ப்புள்ளதாகவும், அது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள அமித்ஷா

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. 2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கட்சிகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிட உள்ள நிலையில், அது மற்ற கட்சிகளுக்கு போட்டியை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக மிக தீவிர அரசியல் நடவடிக்கையில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

தற்போதைய தமிழக அரசியல் களத்தை பொருத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் களம் காண உள்ளன. ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தவிர மற்ற எந்த கட்சிகளும் தங்களது கூட்டணியைன் அறிவிக்காமல் உள்ளன. இதன் காரணமாக தற்போதைய நிலவரத்தின் படி, தமிழகத்தில் 5 முதல் 6 முனை போட்டியாக இந்த சட்டமன்ற தேர்தல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிமுக – பாஜக இடையேயான கூட்டனி நிலைப்பாட்டை பொருத்து இதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதற்காக வாய்ப்பு உள்ளது.

மீண்டும் அமையுமா பாஜக – அதிமுக கூட்டணி

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து களம் கண்டனர். ஆனால், இந்த தேர்தல் அதிமுக மற்றும் பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வியை பெற்று தந்தது. இருப்பினும், சில காலங்கள் தொடர்ந்த இந்த கூட்டணி, அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என அதிமுகவினர் பேசி வந்த நிலையில் மோதம் முற்றியதால் கூட்டணி களைவதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாஜக, அதிமுக தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் அமைவதற்காக சூழல் உருவாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மரியாதை நிமித்தமாக சந்தித்தாக கூறி முடித்துவிட்டார். இந்த நிலையில், தமிழகம் வந்துள்ள அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 11, 2025) மீண்டும் சந்திக்க உள்ளார். இந்த நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கேப்டன்ஷியில் இருந்து நீக்க முடிவு! அழுத்ததால் ரோஹித் ஓய்வா?
கேப்டன்ஷியில் இருந்து நீக்க முடிவு! அழுத்ததால் ரோஹித் ஓய்வா?...
அதர்வாவின் 'டிஎன்ஏ' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு .. ரசிகர்கள் ஹேப்பி!
அதர்வாவின் 'டிஎன்ஏ' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு .. ரசிகர்கள் ஹேப்பி!...
காந்தாரா படப்பிடிப்பில் நடந்த சோகம்.. விபத்தில் நடிகர் மரணம்!
காந்தாரா படப்பிடிப்பில் நடந்த சோகம்.. விபத்தில் நடிகர் மரணம்!...
அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வு..
அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வு.....
ரசிகர்களிடம் அஜித் எதிர்பார்க்கும் விஷயம்.. சினேகா சொன்ன பதில்!
ரசிகர்களிடம் அஜித் எதிர்பார்க்கும் விஷயம்.. சினேகா சொன்ன பதில்!...
இயக்குநராக இருந்து படத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்?
இயக்குநராக இருந்து படத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்?...
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்! எங்கே காண்பது? முழு விவரம்
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்! எங்கே காண்பது? முழு விவரம்...
ஜி.வி பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்கும் கயாடு லோஹர்!
ஜி.வி பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்கும் கயாடு லோஹர்!...
சூப்பர்ஃபுட் பாகற்காய்.. ஆனால்! இந்த உணவுகளுடன் சாப்பிடாதீர்கள்!
சூப்பர்ஃபுட் பாகற்காய்.. ஆனால்! இந்த உணவுகளுடன் சாப்பிடாதீர்கள்!...
ரூ.25 ஆயிரத்தில் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்!
ரூ.25 ஆயிரத்தில் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்!...
வட்டி மட்டுமே ரூ.2 லட்சம் வழங்கும் அசத்தல் எஃப்டி திட்டம்!
வட்டி மட்டுமே ரூ.2 லட்சம் வழங்கும் அசத்தல் எஃப்டி திட்டம்!...