விஜய் மீதான குற்றச்சாட்டு – ஆதரவாக பேசிய செங்கோட்டையன்

TVK Vijay : தமிழக சட்டமன்ற தேர்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் மீதான குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் துண்டுச்சீட்டு தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மீதான குற்றச்சாட்டு - ஆதரவாக பேசிய செங்கோட்டையன்

விஜய் - செங்கோட்டையன்

Updated On: 

01 Mar 2026 17:19 PM

 IST

ஈரோடு, மார்ச் 1 : வேலூரைத் தொடர்ந்து அடுத்ததாக மார்ச் 4, 2026 அன்று தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நிர்வாகிகளை சந்திக்கவிருக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஈரோட்டில் தவெக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் விஜய் குறித்து சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். குறிப்பாக விஜய் விஜய் பேப்பரைப் பார்த்து படிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். அதகு குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய்க்கு ஆதரவாக பேசிய செங்கோட்டையன்

இதுகுறித்து பேசிய அவர், அரசியல் மேடைகளில் முக்கியமான விஷயங்கள் புள்ளி விவரங்கள், திட்ட அறிவிப்புகள் போன்றவற்றை பேசும்போது குறிப்புகளை பேசுவது இயல்பான ஒன்று தான். மேலும் பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை பல முக்கிய தலைவர்கள் பேசும்போது டெலிபிராம்ப்டர் அல்லது குறிப்புகளை பயன்படுத்துவது வழக்கம். அதில் தவறு ஏதும் இல்லை என்றார்.

இதையும் படிக்க :  மதுரையில் இன்று பிரசாரம்.. சென்னை வந்த பிரதமர் மோடி.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

மேலும் பேசிய அவர், விஜய் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். அதனால் தனது கருத்துக்களை புதிதாக எந்த தவறும் இல்லாமல் இயல்பாக பேச குறிப்புகள் அவசியம். ஒருவர் எதை பார்த்து பேசுகிறார் என்பது முக்கியம் அல்ல. மக்களிடம் அவர் பேசும் விஷயங்கள் என்ன, அது மக்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இறுக்கிறது என்பதே முக்கியம் என்றார்.

அரசில் மேடைகளில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் பின்னர் ஆய்வு செய்யப்படும் சூழ்நிலையில், தவறான தகவல் பரவாமல் இருக்க தலைவர்கள் முன் கூட்டியே தயாராகி பேசுவது பொறுப்பான அணுகுமுறை. குறிப்பாக தேர்தல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில் எதிர்கட்சிகளும் விமர்சகர்களும் சிறிய விஷயங்களை பெரிய சர்ச்சையாக்க நினைக்கிறார்கள் என்றார்.

இதையும் படிக்க : பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நுழைவு வாயிலில் பெரியார் படம் அகற்றம்

விஜய் பேப்பரைப் பார்த்து படிக்கிறார். அதில் சொல்லப்பட்டிருப்பது போலவே நடந்துகொள்கிறார். அவரது பேச்சில் இயல்பான அணுகுமுறை இல்லை என ஒவ்வொரு முறை அவர் மக்கள் சந்திப்புக்கு பின் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் முதன்முறையாக செங்கோட்டையன் இந்த விமர்சனங்களு்ககு விளக்கமளித்துள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். சில இடங்களில் கட்சி தொண்டர்களிடையே மோதல்களும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் கருத்து மோதல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ
லாபத்தின் 70% போனஸாக வழங்கிய சீன நிறுவனம்.. இணையத்தில் வைரல்..
கனவில் துரத்தும் மர்ம நபர்… ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘சீக்ரெட் ஸ்டோரீஸ்
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்